ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
மலையாளத்தில் கடந்தாண்டு ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. குறைந்த அளவு பட்ஜெட்டில் வளர்ந்து வரும் மூன்று இளம் ஹீரோக்களை வைத்து மார்ஷியல் ஆர்ட்ஸ் பின்னணியில் ஒரு பழிவாங்கல் கதையாக இது உருவாகி இருந்தது. அறிமுக இயக்குனர் நகாஸ் ஹிதாயத் இந்த படத்தை இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 50 கோடிகளுக்கு மேல் வசூலித்தது. இந்த நிலையில் இந்த படத்தில் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் தனக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு தர வேண்டும் என்று ஆர்டிஎக்ஸ் படத்தின் தயாரிப்பாளரான சோபியா பால் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளார்.
வெற்றிப் படத்தை கொடுத்தவரிடம் நஷ்ட ஈடு கேட்பார்களா என ஆச்சரியப்பட வேண்டாம். நகாஸ் முதல் படம் இயக்க ஒப்புக்கொண்டபோதே இரண்டாவது படத்தையும் அவர்களது நிறுவனத்திற்கு தான் இயக்க வேண்டும் என்கிற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். முதல் படத்தில் 15 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்ட நிலையில் இந்த இரண்டாவது படத்திற்கு 40 லட்சம் ரூபாய் இயக்குனர் நகாஸ் ஹிதாயத்திற்கு கொடுக்கப்பட்டதுடன் முன் தயாரிப்பு பணிகளுக்காக 4.82 லட்சம் ரூபாய் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென இந்த படத்தில் பணிபுரிய தனக்கு விருப்பமில்லை என்று இயக்குனர் நகாஸ் ஹிதாயத் பின் வாங்கினார். இதனால் ஏற்கனவே தங்களுக்கு செய்து தந்திருந்த ஒப்பந்தத்தை இவர் மீறி விட்டார் என கூறியுள்ள தயாரிப்பாளர் சோபியா பால் இவருக்கு தாங்கள் கொடுத்த தொகையுடன் மேலும் 50 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு என ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து மொத்தம் ஒரு கோடி ரூபாய் பணத்தை திருப்பித் தர வேண்டும் என சம்மன் அனுப்பி உள்ளார். ஆனால் இயக்குனர் நகாஸ் ஹிதாயத் இது குறித்து கூறும் போது தனக்கு இதுபோன்று எந்த ஒரு சம்மனும் வரவில்லை என்று கூறியுள்ளார்.