ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

விக்ரம் நடித்த தங்கலான், வீரதீரசூரன் போன்ற படங்கள் கமர்ஷியலாக பெரிய வெற்றி பெறவில்லை. இந்த படங்களில் உயிரை கொடுத்து அவர் நடித்து இருந்தாலும், வசூல் மழை பொழியவில்லை. அதனால், ஒரு கமர்ஷியல் வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்று நினைக்கிறார் விக்ரம். இப்போது 96, மெய்யழகன் வெற்றியை கொடுத்த பிரேம்குமார் இயக்கத்தில் நடிக்கப் போகிறார். அதற்கடுத்து ‛மண்டலோ' படமெடுத்த மடோன் அஸ்வின் படத்திலும், அதற்கடுத்து ஒரு மலையாள இயக்குனர் படத்திலும் நடிக்கப்போகிறார். இதில் ஒரு படமானது சூப்பர் ஹிட் ஆக வேண்டும் என்று நினைக்கிறாராம்.
அதேபோல், அவர் மகன் துருவ் நடிப்பில் ‛பைசன்' படம் தீபாவளிக்கு வருகிறது. இதை மாரி செல்வராஜ் இயக்கி உள்ளார். அவர் இதற்கு முன்பு நடித்த ஆதித்ய வர்மா, மகான் படங்கள் கமர்ஷியலாக பேசப்படவில்லை. அவரும் அப்பா மாதிரி ஒரு வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
2025ல் அந்த வெற்றியை கொடுக்க வேண்டும் என்று அப்பாவும், மகனும் உறுதியாக இருக்கிறார்களாம். மகான் படத்தை போல, இனி இணைந்து நடிக்கப் போவதில்லை என்றும் முடிவெடுத்து இருக்கிறார்களாம்.




