கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ | மதம் மாறிவிட்டேனா: பாடகர் மனோ சொன்ன பதில் | ஏவிஎம் நிறுவனம் படம் தயாரிப்பதை நிறுத்தியது ஏன்? இயக்குனர் எஸ்.பி முத்துராமன் |

கமல், நடிப்பு மற்றும் தயாரிப்பில் ஹாலிவுட் ரேன்ஞ்சுக்கு தயாரான படம் 'விக்ரம்'. 1986ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தில் சத்யராஜ், டிம்பிள் கபாடியா, அம்ஜத்கான், சாருஹாசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். ஜேம்ஸ் பாண்ட் படங்களின் பாணியில் உருவாகி இருந்ததால் படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இந்த படம் வெளியான அதே தேதியில்தான் வி.அழகப்பன் இயக்கிய 'பூக்களை பறிக்காதீர்கள்' என்ற படம் வெளியானது. சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்த இந்த படத்தின் சிறப்பு அம்சமே டி.ராஜேந்தர் இசை அமைத்திருந்ததுதான்.
படம் வெளியான சில நாட்களிலேயே படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட். அதேபோல விக்ரம் படத்தில் இளையராஜா இசை அமைத்த பாடல்களும் ஹிட்டானது. விக்ரம் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாமல் திணறிக் கொண்டிருந்தபோது எதிர்பார்ப்பே இல்லாமல் வெளிவந்த பூக்களை பறிக்காதீர்கள் படம் பெரிய வரவேற்பை பெற்றது.
ஒரு வழியாக இரண்டு படங்களுமே 100 நாட்களை தொட்டது. 'விக்ரம்' படத்தில் பிரமாண்டம் இருந்தது. 'பூக்களை பறிக்காதீர்கள்' படத்தில் எளிமையும், அழகும் இருந்தது. இரண்டு படத்தையுமே மக்கள் ரசித்தார்கள்.
அப்போது இளம் ஜோடிகளாக வலம் வந்த சுரேஷ், நதியா நடித்தார்கள். இவர்களுடன் வினு சக்ரவர்த்தி, ராஜீவ் உள்ளிட்டோர் நடித்தனர். கே.பி.தயாளனின் ஒளிப்பதிவு பரவலாக பேசப்பட்டது.