கொலை செய்யப்பட்ட தமிழ் ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த தேசிய விருது | இரு தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் வெற்றி பெற்ற அம்மா சென்டிமெண்ட் படம் | பிளாஷ்பேக் : எம்.எஸ்.பாஸ்கருக்கு விருது கிடைத்திருக்க வேண்டிய கதாபாத்திரங்கள் | மீண்டும் விசாரணைக்கு வருகிறது மான்வேட்டை வழக்கு | வசூலை குவிக்கும் இந்திய அனிமேஷன் படம் | சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி |
தமிழில் அவ்வப்போது குழந்தைகள் சினிமா உருவாகிறது. ‛பசங்க, காக்கா முட்டை, சாட் பூட் த்ரி, பூவரசம் பூ பீபீ, குரங்கு பெடல்' பட வரிசையில் தற்போது உருவாகி உள்ள படம் 'பிஎம்டபிள்யூ 1991'. கிரீன்விஸ் சினிமா சார்பில் வில்வங்கா தயாரிப்பில் உருவாகி உள்ளது.
பையா, கருங்காலி, வி3 உள்ளிட்ட பல படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்த பொன்முடி திருமலைசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். பொன்முடியுடன் வட சென்னை படத்தில் தனுஷுக்கு அம்மாவாக நடித்த மணிமேகலை மற்றும் படத்தின் மைய கதாபாத்திரமாக மதுரையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கவுதம் நடித்துள்ளனர். முக்கிய கதாப்பாத்திரத்தில் சாப்ளின் பாலு நடித்துள்ளார்.
இதுவரை பல சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு இப்படம் அனுப்பப்பட்டு 22 விருதுகளை பெற்றுள்ளது. படம் குறித்து இயக்குநர் பொன்முடி திருமலைசாமி கூறும்போது, “இதற்கு முன்பாக நான் இயக்கிய சோம பான ரூப சுந்தரம் படத்தில் விஷ்ணு பிரியன், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடித்தனர். சில காரணங்களால் அந்த படத்தை எடுக்க முடியாத அளவிற்கு பிரச்சனைகள் இருந்தது.
கோபத்தில் கதாநாயகன், நாயகி இல்லாமலேயே ஒரு படத்தை எடுக்க முடிவு செய்தேன். இதை சாதிக்க முடியுமா என்று நினைத்தபோது தான் இந்த கதை கிடைத்தது. படத்தில் ஒரு சைக்கிள் தான் பிரதான இடம் பிடித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள அனைத்து மனிதர்களுக்கும் பொதுவான ஒன்றுதான் சைக்கிள். ஒரு காலத்தில் சைக்கிள் வைத்திருப்பதே மிகப்பெரிய கவுரவமாகவும் பெரிய விஷயமாகவும் பார்க்கப்பட்டது. சொல்லப்போனால் ஒரு காருக்கு நிகராக அதை பலர் கருதினார்கள். அதை மையப்படுத்தி தான் இந்த படத்தின் கதையை உருவாக்கினேன்.
இந்த படத்தின் மைய கதாபாத்திரமாக மதுரையை சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் கவுதம் நடித்துள்ளார். விருதுக்கான படம் என்றாலும் கூட, இதில் மூன்று பாடல்களும் ஒரு சண்டைக் காட்சியும் இடம்பெற்றுள்ளன. இரண்டு மணி நேரம் ஓடும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது என்றார்.