'இட்லி கடை, ஓஜி, காந்தாரா 1' - அடுத்தடுத்து வெளியாகும் டிரைலர்கள் | ஆஸ்கர் தேர்வுக்கு ஒரு தமிழ்ப் படம் கூட இல்லையா ? | குஷி பார்ட் 2 உருவாகுமா? விஜய் மகன், ஜோதிகா மகள் நடிப்பார்களா? | ஏழு பெண்களின் பிரச்னைகளை பேசும் விதமாக ‛கமல் ஸ்ரீதேவி' பெயரில் வெளியாகி உள்ள படம் | இப்போதும் மனதை அழுத்தும் சோகம் ; அனுபமா பரமேஸ்வரன் | பொதுவெளியில் விவாதத்தை ஏற்படுத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மோகன்லால் பேசிய வார்த்தைகள் | பத்து வருட பயணத்தில் முதன்முறையாக தாய்மொழியில் நடிக்கும் சந்தோசத்தில் வர்ஷா பொல்லம்மா | மார்கோ 2ம் பாகத்தில் யஷ் நடிக்கவில்லை ; அவரது டீம் தகவல் | குடியிருந்த கோயில், பாண்டி, வாரிசு - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலுக்கு தாதா சாகேப் பால்கே விருது; மத்திய அரசு அறிவிப்பு |
தெலுங்கு திரையுலகில் சீனியர் நடிகர்களில் இப்போதும் ஆக்டிவாக நடித்து வருபவர் பாலைய்யா என்று ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் பாலகிருஷ்ணா. தொடர்ந்து ஆக்ஷன் படங்களிலேயே நடித்து வரும் இவர், லாஜிக் முக்கியமில்லை ரசிகர்களுக்காக நான் நடத்தும் மேஜிக் தான் முக்கியம் என்று கூறி ரசிகர்களை திருத்திப்படுத்தும் விதமாகவே படங்களில நடித்து வருகிறார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வெளியாகிய மிகப்பெரிய வெற்றி பெற்ற அகண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் தற்போது நடித்து வருகிறார்.
சமீபத்தில் தனது 66வது வயதில் அடி எடுத்து வைத்துள்ள பாலகிருஷ்ணா, ரசிகர்களுடன் சேர்ந்து பிறந்தநாளை கொண்டாடினார். அப்போது வரவழைக்கப்பட்ட பிரம்மாண்டமான கேக்கை பாலகிருஷ்ணா வெட்டினார். வெட்டுவதற்கு முன்பாக தன் கையில் இருந்த கத்தியை ஸ்டைலாக மேலே சுழற்றி தூக்கி போட்டு பின் அதை பிடித்து கேக்கை வெட்டினார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் கேக்கை வெட்டுவதில் கூட பாலையாவின் ஸ்டைலே தனி என்று சிலாகிக்கிறார்கள்.