பிளாஷ்பேக்: ஈர்ப்புள்ள பாரதியாரின் பாடல்களும், இணையற்ற ஏ வி எம்மின் “நாம் இருவர்” திரைப்படமும் | கமலை சந்தித்த 'உசுரே' படக்குழுவினர்: பிக்பாஸ் பாசத்தில் ஜனனி ஏற்பாடு | 'மிஸ்டர் ஜூ கீப்பர், அடங்காதே' இந்தமுறையாவது சொன்னபடி வெளியாகுமா? | வடிவேலுக்கு இந்த நிலையா?: மாரீசன் காட்சிகள் ரத்தான பரிதாபம் | திருமணம் எப்போது? விஜய்தேவரகொண்டா பதில் இதுதான் | சினிமாவில் இது தான் எதார்த்தம் : திரிப்தி டிமிரி | சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்படும் சாய்பல்லவியின் சீதா தேவி கதாபாத்திரம்! | விஜய் இல்லாமல் எல்சியுவை தொடர சான்ஸ் இல்லை! - லோகேஷ் கனகராஜ் | பிரசாந்த் நீல், ஜூனியர் என்டிஆர் படத்தில் இணைந்த டொவினோ தாமஸ் | பாலிவுட் நடிகர் அமீர்கான் வீட்டுக்கு போன 25 ஐபிஎஸ் அதிகாரிகள்! |
கடந்த 2022ல் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற படம் காந்தாரா. ரிஷப் ஷெட்டி இயக்கி, கதாநாயகனாக நடித்த இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் 'காந்தாரா ; சாப்ட்டர் 1' என்கிற டைட்டிலுடன் தயாராகி வருகிறது. தற்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்த மலையாளத் திரையுலகை சேர்ந்த துணை நடிகரான கலாபவன் நிஜு என்பவர் படப்பிடிப்பின் போது மாரடைப்பால் காலமானார்.
துணை நடிகர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் அவர் தங்கியிருந்தபோது திடீரென நெஞ்சு வலி ஏற்படவே உடனடியாக பெங்களூருவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர், சிகிச்சைக்கு முன்பாகவே உயிரிழந்துள்ளார். கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் மிமிக்ரி கலைஞராக புகழ்பெற்றிருந்த இவர் சமீபகாலமாகத்தான் திரைப்படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக உன்னி முகுந்தன் தயாரித்து நடித்த மாளிகைப்புரம், மார்கோ ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் இவர் நடித்திருந்தார், இந்த நிலையில் தான் 'காந்தாரா 2' படத்தில் நடிப்பதற்கு ஆடிசன் மூலமாக இவர் தேர்வாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது,
பட்ட காலிலேயே படும் என்பது போல கடந்த மே மாதம் இதேபோல கேரளாவை சேர்ந்த கபில் என்கிற துணை நடிகர் ஒருவர் இந்த படத்தின் கலந்து கொண்டு நடித்தபோது, ஓய்வு நேரத்தில் கொல்லூரில் உள்ள சவுபர்ணிகா ஆற்றில் குளிக்க சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இறந்தார். இப்படி அடுத்தடுத்து அதுவும் மலையாளத் திரையுலகை சேர்ந்த துணை நடிகர்கள் 'காந்தாரா 2' படப்பிடிப்பில் மரணமடைந்து வருவது படக்குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.