காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி | பிளாஷ்பேக் : இயக்குனர் அனு மோகனை தெரியுமா? |

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு கன்னடத்தில் உருவாகி தென்னிந்தியா முழுவதும் வரவேற்பை பெற்ற படம் 'காந்தாரா'. கன்னடத்தில் இருந்து வெளியான 'கேஜிஎப்' படத்தை தொடர்ந்து அடுத்ததாக மிகப்பெரிய வரவேற்பு பெற்ற காந்தாரா திரைப்படத்தின் மூலம் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான ரிஷப் ஷெட்டியும் தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட் வரை பிரபலமான நடிகர் ஆகிவிட்டார். அடுத்ததாக அவர் 'காந்தாரா லெஜன்ட் ; சாப்டர் 1' என்கிற பெயரில் காந்தாரா படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார். இதற்கான பணிகளில் தற்போது அவர் ஈடுபட்டுள்ளார்.
இந்த படம் காந்தாரா படத்தின் பிரீக்வல் அதாவது முன் கதையாக உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்க இருக்கிறார்கள் என அனைவரும் ஆவலாக எதிர்பார்த்த நிலையில் நடிகை ருக்மணி வசந்த் இதில் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இவர்தான் தற்போது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இது மட்டுமல்ல விஜய்சேதுபதியின் 51 வது படத்திலும் இவர் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.