மூணு குழந்தைகள் பெத்துக்கணும்... ஜான்வி கூறும் காரணம் | இரண்டாவது வாய்ப்பில் வெற்றி பெறுவாரா ருக்மிணி வசந்த்? | ‛கட்டா குஸ்தி 2' படம் துவங்கியது | சுதீப்பின் அடுத்த படத் தலைப்பு 'மார்க்' | தெலுங்கில் 100 கோடி வியாபாரத்தில் 'காந்தாரா சாப்டர் 1' | ரசிகர்களின் எதிர்பார்ப்புக்காக மட்டுமே படம் எடுக்க மாட்டேன் : லோகேஷ் கனகராஜ் | நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு அங்கீகாரம்: மிர்னா மேனன் | பிளாஷ்பேக்: ரஜினி படத்தை தயாரித்து, இயக்கிய கன்னட நடிகர் | பிளாஷ்பேக்: ஹாலிவுட் ரீமேக்கில் நடிக்க மறுத்த பானுமதி | நடப்பு தயாரிப்பாளர் சங்க தேர்தல் : அனைத்து நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு |
பிரபாஸ் நடிப்பில் நாக் அஸ்வின் இயக்கத்தில் கடந்த ஜூன் 27ஆம் தேதி கல்கி 2898 ஏடி திரைப்படம் வெளியானது. அமிதாப் பச்சன், கமல்ஹாசன் போன்ற ஜாம்பவான் நடிகர்களுடன் இன்னும் பல பிரபல நட்சத்திரங்கள் இந்த படத்தில் சிறிதும் பெரிதுமான கதாபாத்திரங்களில் தங்களது பங்களிப்பை அளித்திருந்தனர். சயின்ஸ் பிக்சன் கதையாக உருவாகியிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்த தவறவில்லை. அந்த வகையில் தற்போது வரை கிட்டத்தட்ட 1300 கோடி வரை இந்த படம் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
படம் வெளியாகி ஒரு மாதத்திற்கு மேல் ஆன நிலையில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இன்று (ஆக-2) முதல் வரும் ஆக-9ஆம் தேதி வரை இந்த படத்தை இந்தியா முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெறும் 100 ரூபாய் சிறப்பு கட்டணத்தில் கண்டு களிக்கலாம் என தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் படம் பார்க்காமல் இருப்பவர்களையும் தியேட்டருக்கு அழைத்து வரும் இன்னொரு புதிய யுக்தி தான் இது என்றே தெரிகிறது.