மருமகனுக்காக படம் தயாரிக்கும் விஜய் ஆண்டனி | ரஜினியே ரத்தத்தை நம்பி தான் படம் எடுக்கிறார் : ராதாரவி பேச்சு | இந்து தர்மத்தை சினிமாவில் சொல்வதை நினைத்து பெருமைப்படுகிறேன் : ‛ஹனுமன்' ஹீரோ | பார்வையாளர்களின் பதிலை மட்டுமே மதிக்கிறேன் : பல்லவி ஜோஷி | 100 மில்லியன் கடந்த 'முத்த மழை' மேடைப் பாடல் | 'மிராய்' டிரைலரைப் பார்த்து வாழ்த்திய ரஜினிகாந்த் | அல்லு அர்ஜுன், பவன் கல்யாண் 'மனஸ்தாபம்' முடிவுக்கு வந்ததா ? | 'கைதி 2' படத்திற்கு இசை அனிருத்? | சமூக வலைத்தள கொள்ளையர்கள் : IFTPC காட்டம் | பூஜா ஹெக்டேவுக்கு என்னதான் ஆச்சு ? |
கடந்த 2012ம் ஆண்டு ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட் என்ற காரை வாங்கினார் நடிகர் விஜய். அந்த காருக்கு 132 சதவீதம் வரி விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதையடுத்து வெளிநாட்டில் இருந்து வாங்கிய அந்த காருக்கு அவர் உரிய வரி செலுத்தவில்லை என்று நீதிமன்றம் கண்டித்தது. அதோடு வரி என்பது நன்கொடை கிடையாது. அது கட்டாய பங்களிப்பு என்று குறிப்பிட்டு அவருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அது மட்டுமின்றி, ரீல் ஹீரோவாக மட்டும் இருக்காதீர்கள். ரியல் ஹீரோவாகவும் இருங்கள் என்றும் நீதிபதி கூறியது அப்போது பேசுபொருளானது.
இப்படியான நிலையில், எம்பயர் ஆட்டோ என்ற டீலர்ஷிப்பில் விஜய்யின் அந்த கார் விற்பனைக்கு விடப்பட்டுள்ளது. அதோடு அவரது ரோல்ஸ் ராய்ஸ் கார் விற்பனைக்கு வந்திருப்பது இணையத்திலும் வைரலாகி வருகிறது. அதன் விலை 2.6 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம். அதே நேரம் இந்த விலை நிரந்தரமானது இல்லை. வாடிக்கையாளர் தேவைக்கேற்ப மாறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.