சரோஜாதேவி மறைவு: முதல்வர், திரைப்பிரபலங்கள் இரங்கல் | சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள் | எம்ஜிஆர் - சரோஜா தேவி இணைந்து நடித்த 26 படங்கள் | சூப்பர் குட் பிலிம்ஸ் 99வது தயாரிப்பில் விஷால் | 'தாமரை நெஞ்சம்' ஒரு படம் போதுமே: பாலசந்தர் அளித்த பதில் | தமிழில் தனது கடைசி படத்தில் நடித்த சரோஜா தேவி | ‛வெள்ளி விழா' படங்களில் முத்திரை பதித்த சரோஜா தேவி : வரிசை கட்டிய விருதுகள் | தனது உயிர் சென்னையில் பிரிய வேண்டும் என்று பேசியிருந்த சரோஜா தேவி | புதிய போட்டி வந்தாலும், சம்பளத்தை உயர்த்திய அனிருத் | தங்கள் தனிப்பட்ட சண்டையை மேடையில் பேசிய விஜய் சேதுபதி, பாண்டிராஜ் |
தனுஷ் இயக்கி, நடித்து திரைக்கு வந்துள்ள 50வது படம் ராயன். இந்த படத்தில் துர்கா என்ற வேடத்தில் நடித்தவர் துஷாரா விஜயன். அவரது நடிப்பிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. அது குறித்து அவர் வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு : ‛‛தனுஷ் இயக்கிய ராயன் படத்திற்கு தாங்கள் அளித்து வரும் ஆதரவுக்கு பெரிய நன்றி. என் உழைப்பிற்கு கிடைத்த தங்களின் அன்பும் அரவணைக்கும் வார்த்தைகளும் என் மனதிற்கு நெருக்கமாகவே நிலைத்திருக்கும். படத்துவக்கம் முதல் தற்போது மாபெரும் வெற்றி படமாக ராயன் உருமாறி இருக்கும் வரையிலான பயணம் மிகப்பெரியது.
வெகுஜன மக்களிடம் என் கதாபாத்திரம் உள்பட ஏனைய கதாபாத்திரங்களையும் கொண்டு சேர்த்ததிலும் மாபெரும் வெற்றியை உறுதி செய்ததிலும் ஊடகத்தின் பங்கு முக்கியமானது. அதற்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள். எங்கள் இயக்குனர் தனுஷிற்கும் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன். துர்காவிற்கு கிடைத்த அங்கீகாரமும், அன்பும், வெற்றியும் மக்களால் சாத்தியமானது என்றால் அது மிகையில்லை. தொடர்ந்து உங்கள் அனைவரையும் மகிழ்விக்க உழைத்துக் கொண்டே இருப்பேன். ஆக்கப்பூர்வமாய் விமர்சனங்களை கருத்தில் கொண்டு என் பயணத்தை செழுமைப்படுத்துவேன்'' என்று தெரிவித்துள்ளார்.