கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” |

கடந்த 2013ம் ஆண்டில் ஹிந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கிய ராஞ்சனா என்ற படத்தில் பாலிவுட்டில் அறிமுகமானார் தனுஷ். அப்படத்தில் அவருக்கு ஜோடியாக சோனம் கபூர் நடித்திருந்தார். அதன்பிறகு மீண்டும் ஆனந்த் எல். ராய் இயக்கிய அட்ராங்கி ரே என்ற படத்தில் நடித்த தனுஷ், தற்போது மூன்றாவது முறையாக அவரது இயக்கத்தில் தேரே இஷ்க் மெயின் என்ற படத்தில் நடித்திருக்கிறார். காதல் கதையில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக கிர்த்தி சனோன் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படம் நவம்பர் 28ம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் டிக்கெட் முன்பதிவு நடந்து வருகிறது. அந்த வகையில் இப்படம் இதுவரை 3.8 கோடி வசூல் செய்திருப்பதாக பாலிவுட் ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன .