கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” |

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி உள்ள கருப்பு படத்தை அடுத்து வெங்கி அட்லூரி இயக்கிய தனது 46வது படத்தில் நடிக்க தொடங்கினார் சூர்யா. தற்போது அப்படத்தின் படப்பிடிப்பும் இறுதி கட்டத்தை எட்டி உள்ளது. இந்த நிலையில் சூர்யா 46வது படம் அடுத்த ஆண்டு மே மாதம் திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு மற்றும் ராதிகா சரத்குமார், ரவீனா டண்டன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். குடும்ப கதையில் உருவாகியிருக்கும் இப்படத்தில் கஜினி படத்தில் நடித்த சஞ்சய் ராமசாமி கெட்டப்பில் நடித்திருக்கிறார் சூர்யா. இதையடுத்து டிசம்பர் 8ம் தேதி முதல் ஜீத்து மாதவன் இயக்கும் தனது 47 வது படத்தில் நடிக்க போகிறார். மேலும் சூர்யா 46வது படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் கருப்பு படம் பொங்கலுக்கு பிறகு ஜனவரி 23-ல் வெளியாவதற்கு வாய்ப்பு இருப்பதாக கோலிவுட்டில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.