‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? | ஆண் ஆதிக்கம் இருப்பது கசப்பான உண்மை : கீர்த்தி சுரேஷ் | 'ஆண் பாவம் பொல்லாதது'..... முதல் பட்டியலில் நீளும் ஓடிடி ரிலீஸ்...! | சிக்கலில் இருந்து மீண்ட ‛கருப்பு' | விஜய் தேவரகொண்டா படத்தில் ‛தி மம்மி' பட வில்லன் | லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தின் அப்டேட் | கிரிக்கெட்டர் ஸ்ரீகாந்த் மகன் அனிருத்தா உடன் நடிகை சம்யுக்தா திருமணம் | காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் |

தெலுங்கில் ராகுல் சங்கிரித்யன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா அவரது 14வது படமாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். பெயரிடப்படாத இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டிசீரிஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சில மாதங்களாக நடைபெற்று வருகிறது.
இது பீரியட் டிராமா ஜானரில் உருவாகிறது. ஏற்கனவே இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருவதாக கூறப்படுகிறது. சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பில் ‛தி மம்மி' படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான அர்னால்ட் வோஸ்லு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் வெளியான போட்டோ மூலம் இது உறுதியாகியுள்ளது.