சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப் | மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் | 'ஓஜி' புரமோஷன் நிகழ்ச்சியில் பவன் கல்யாணின் வாள்வீச்சில் இருந்து மயிரிழையில் தப்பிய பாதுகாவலர் | தாதா சாஹேப் பால்கேவுக்கு மோகன்லால் விருது வழங்கப்பட வேண்டும் : ராம் கோபால் வர்மா | மோடியாக நடிக்கும் உன்னி முந்தனுக்கு உடனடியாக ஹிந்தியில் ஒப்பந்தமான இரண்டு படங்கள் | ஆயிரம் கோடி டார்கெட்டில் காந்தாரா | தமிழில் வெளியாகும் புதிய அனகோண்டா | டைரக்டரை அண்ணா என அழைத்த ப்ரீத்தி அஸ்ராணி | அசுரனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா | சக்தித் திருமகன், காந்தி கண்ணாடி வெற்றியா |
நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இதில் ஒவ்வொரு படமாக முடித்து வருகிறார் பிரபாஸ். அந்த வகையில் அடுத்ததாக அவரது நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் படம் ராஜா சாப். இயக்குனர் மாருதி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் கதாநாயகிகளாக மாளவிகா மோகனன் மற்றும் நிதி அகர்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு பிரபல தெலுங்கு இயக்குனர் பூரி ஜெகன்நாத் மற்றும் நடிகை சார்மி கவர் இருவரும் திடீர் விசிட் அடித்து ஆச்சரியப்படுத்தி உள்ளனர்.
இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன. தற்போது விஜய் சேதுபதி நடித்து வரும் படத்தை பூரி ஜெகன்நாத், சார்மி கவுர் இருவரும் இணைந்து தயாரித்து வருகின்றனர், இந்த படப்பிடிப்பு இடைவேளைக்கு நடுவில் தங்களது 'டார்லிங்' ஆன பிரபாஸை பார்ப்பதற்காக நட்பு ரீதியாக ராஜா சாப் படப்பிடிப்பு தளத்திற்கு இவர்கள் விசிட் அடித்துள்ளதாக தெரிகிறது. இதற்கு முன்னதாக பிரபாஸை வைத்து புச்சிகாடு (2008) மற்றும் ஏக் நிரஞ்சன் (2009) என இரண்டு படங்களை அடுத்தடுத்த வருடங்களில் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.