இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள மழை பிடிக்காத மனிதன் திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று (ஆக-2) வெளியாகி இருக்கிறது. இந்த படத்தில் நடிகர்கள் சரத்குமார் மற்றும் சத்யராஜ் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மறைந்த நடிகர் விஜயகாந்தை ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப் போவதாக அவர் உயிருடன் இருந்த காலகட்டத்திலேயே சொல்லி வந்தார் விஜய் மில்டன்.
ஆனால் விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இருந்ததால் அவர் நினைத்தது கை கூடவில்லை. அதனால் அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் சத்யராஜை நடிக்க வைத்துள்ளார் விஜய் மில்டன். ஆனாலும் இந்த படத்தில் விஜயகாந்தை ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் சில காட்சிகளில் இடம்பெறச் செய்துள்ளார்கள் என்கிற தகவல் வெளியே பரவியது. அதன் பின்னர் தான் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா தரப்பில் இருந்து தங்கள் அனுமதியில்லாமல் செயற்கை தொழில்நுட்பம் மூலம் யாரும் விஜயகாந்த்தை தங்கள் படங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அறிக்கை வெளியானது.
இந்த படத்தில் விஜயகாந்த் இருக்கிறாரா என்பது பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ள விஜய் மில்டன், “செயற்கைத் தொழில்நுட்பம் மூலம் விஜயகாந்தை படங்களில் பயன்படுத்திக் கொள்ள அவரது குடும்பத்தினரின் அனுமதி வாங்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால் என் அபிமான நடிகரின் மீதான அன்பை வெளிப்படுத்தும் விதமாக அவரது இருப்பை எனது படம் பார்ப்பவர்கள் உணரும் விதமாக பயன்படுத்தி இருக்கிறேன். அதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை” என்று கூறியுள்ளார். இவர் விஜயகாந்தை எந்த மாதிரி பயன்படுத்தி இருக்கிறார் என்பது படம் பார்த்த பிறகு தான் தெரிய வரும்.