பாலிவுட்டில் அறிமுகமாகும் மீனாட்சி சவுத்ரி | லோகா படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு | 'ஓஜி' வரவேற்பு : ஸ்ரேயா ரெட்டி மகிழ்ச்சி | குடும்பத்துடன் குலதெய்வம் கோவிலில் தரிசனம் செய்த தனுஷ் | துபாயில் சொகுசு கப்பலா... : மாதவன் கொடுத்த விளக்கம் | அருண் விஜய் படத்திற்கு முதல் விமர்சனம் தந்த தனுஷ் | சரஸ்வதி படத்தின் மூலம் இயக்குனர் ஆகும் நடிகை வரலட்சுமி | சாந்தனுவின் ஏக்கம் தீருமா | 'கந்தாரா சாப்டர் 1' போட்டியை சமாளிக்குமா 'இட்லி கடை' | ஹிந்தி பிக்பாஸ் சீசன் 19 நிகழ்ச்சியின் மீது 2 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு |
அடிதடி ஆக்ஷன் ஹீரோவாக நடித்துக் கொண்டிருந்த விஜயகாந்தை எல்லா மக்களுக்குமான நடிகராக மாற்றியது வைதேகி காத்திருந்தாள் படமும், அம்மன் கோவில் கிழக்காலே படமும்தான். இதில் அம்மன் கோவில் கிழக்காலே படத்தின் கதையை ரஜினி நடிப்பதற்காக எழுதினார் ஆர்.சுந்தர்ராஜன். காரணம் அப்போது ரஜினியை இயக்கி விட்டால் இயக்கியவர் முன்னணி இயக்குனராகி விடுவார் என்பதால் அப்படி நினைத்தார்.
ஆனால் கதையை கேட்ட ரஜினி 'நமக்கு மியூசிக் சப்ஜெக்ட் சரிப்பட்டு வராது. ஆக்ஷன் சப்ஜெக்டோடு வாங்க' என்று கூறிவிட்டார். இதனால் அப்போது 'பூ விலங்கு' படத்தில் அறிமுகமான முரளி இளம் ஹீரோவாக வரவேற்பு பெற்று வந்தார். அவரை நடிக்க வைக்கலாம் என்று முடிவு செய்து பெங்களூருவிற்கு சென்று முரளியின் தந்தையை பார்த்து கதை சொன்னார். 'பாலச்சந்தர் படம் என்பதால்தான் 'பூ விலங்கு' படத்தில் என் மகன் நடிக்க சம்மதித்தேன். அவன் கன்னடத்தில் அறிமுகமாகி இருக்க வேண்டும். இப்போது அவன் நடித்துக் கொண்டிருக்கும் கன்னட படம் முடியட்டும் பார்க்கலாம்' என்று கூறிவிட்டார்.
இதனால் மனம் வருந்திய ஆர்.சுந்தர்ராஜன் 'வைதேகி காத்திருந்தாள்' படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததால் விஜயகாந்தையே இந்த படத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்து அவரையே தேர்வு செய்தார். பலமுறை விஜயகாந்துடன் நடிக்க மறுத்து வந்த ராதா, 'வைதேகி காத்திருந்தாள்' வெற்றியால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்தார்.
இளையராஜாவின் பாடல்கள் படத்திற்கு பெரிய உதவி செய்ய 'அம்மன் கோவில் கிழக்காலே' பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பிறகுதான் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் 'ராஜாதி ராஜா' படத்தில் ரஜினி நடித்தார்.