2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி | டீசலுக்கு பின்னால் இருக்கும் அரசியலை பேசும் படம் | பீரியட் பிலிமில் ஐஎன்ஏ அதிகாரியாக நடிக்கும் சசிகுமார் | பிளாஷ்பேக்: நடிகராக ஜெயிக்க முடியாத சிவாஜி வாரிசு | நடிகை வைஜெயந்தி மாலா நலம் : மகன் தகவல் | பிளாஷ்பேக்: கருணாநிதியுடன் இணைந்து படம் தயாரித்த எம்ஜிஆர் | அறிக்கையும் இல்லை, கொண்டாட்டமும் இல்லை : இது அஜித் பாலிசி | விதார்த்தை சீனியர் என்றார் அம்மாவாக நடித்த ரக்ஷனா | கரூர் சம்பவத்தால் காலியான குஷி வசூல் | ரிஷப் ஷெட்டியைப் பாராட்டிய ஜூனியர் என்டிஆர் |
ஏ.பி.நாகராஜன் என்றாலே நமக்கு அவர் இயக்கிய தில்லானா மோகனாம்பாள், திருவிளையாடல், கந்தன் கருணை, திருமால் பெருமை போன்ற புராண படங்கள் தான் நினைவுக்கு வரும். தில்லானா மோகனாம்பாள் இன்றைக்கும் தமிழ் சினிமாவின் டாப் டென் படங்களில் ஒன்றாக இருக்கிறது. ஏ.பி.நாகராஜன் சினிமாவில் அறிமுகமானது நடிகராகத்தான். அதுவும் முதல் படத்திலேயே ஹீரோவாகத்தான். அக்கம்மாபேட்டை பரமசிவன் நாகராஜன் என்பதன் சுருக்கம்தான் ஏ.பி.நாகராஜன். நாடக் துறையில் இருந்து திரைப்படத் துறைக்கு வந்தவர்.
அவர் தனது பழனி கதிரவன் நாடக சபா மூலம் 'நால்வர்' என்ற நாடகத்தை நடத்தினார். இந்த நாடகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அதைத் திரைப்படமாக்க நினைத்தார். படத்தை தயாரிக்க முன்வந்தார், தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு. படத்திற்காக கதையில் சிற் சில மாற்றங்களை செய்து திரைக்கதை எழுதி நாயகனாகவும் நடித்தார். வி.கிருஷ்ணன் இயக்கினார். கே. வி. மகாதேவன் இசையமைத்தார்.
ஒரு பெரிய ஆலையில் கணக்காளராக இருப்பவருக்கு 4 மகன்கள் (நால்வர்). மூத்தவர் போலீஸ் அதிகாரி (ஏ.பி.நாகராஜன்) இரண்டாவது மகன் வழக்கறிஞர், மூன்றாவது மகன் அவர்களது தந்தை பணிபுரியும் அதே ஆலையில் மேற்பார்வையாளர். கடைசி மகன் ஒரு சமூக ஆர்வலர். தந்தை வேலை செய்யும் ஆலையில் நடக்கும் அக்கிரமங்களை இவர்கள் எதிர்த்து போராடுகிறார்கள்.
ஒரு கட்டத்தில் தந்தை மீது ஒரு புகார் வருகிறது. நேர்மையான காவல்துறை அதிகாரியான ஏ.பி.நாகராஜன் தன் தந்தை நிரபராதி என்பதை எப்படி நிரூபிக்கிறார் என்பதுதான் படத்தின் கதை. குமாரி தங்கம், என்.என்.கண்ணப்பா, கே.எஸ்.கிருஷ்ணன், எஸ்.ஆர்.ஜானகி, ஆர்.பாலசுப்ரமணியம், சி.ஆர்.விஜயகுமாரி, டி.பி.முத்துலட்சுமி, வி.எம்.ஏழுமலை உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.