பதட்டத்துடன் சிக்கந்தர் படப்பிடிப்பை நடத்திய ஏ.ஆர். முருகதாஸ் | ஆஸ்கர் விருதுக்காக நான்காவது குழந்தை பெற்றுக் கொள்ள தயார் : வீர தீர சூரன் நடிகர் புதிய லட்சியம் | என் சகோதரி நல்லா நடித்திருக்கிறாரா? - பிரித்விராஜிடம் விசாரித்த அமீர்கான் | இளையராஜாவுக்கு 'பாரத ரத்னா' விருது வழங்க பரிசீலனை? | ஆன்லைன் முன்பதிவில் சாதனை படைத்த 'எல் 2 எம்புரான்' | அடுத்த மூன்று முக்கிய வெளியீடுகளில் இசை ஜிவி பிரகாஷ்குமார் | ‛வார் 2' படத்தால் ‛கூலி' படத்திற்கு அடித்த ஜாக்பாட் | சூர்யா 45 படத்தில் படமாக்கப்பட்ட பிரமாண்ட பாடல் காட்சி | சச்சின் ரீ-ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாண்டிராஜ், விஜய் சேதுபதி படத்தின் தலைப்பு இதுவா? |
மலையாள திரையுலகில் முன்னணி இயக்குனர்களின் ஒருவர் ஜீத்து ஜோசப். மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய திரிஷ்யம் படத்தின் வெற்றி மலையாளத்தையும் தாண்டி தென்னிந்திய மொழிகள் மற்றும் பாலிவுட் வரை இவரை அடையாளப்படுத்தியது. அதன்பிறகு தமிழில் பாபநாசம், மீண்டும் திரிஷ்யம்- 2 என தொடர் வெற்றி படங்களை கொடுத்ததால் இவரது படங்களுக்கு என ஒரு தனியாக ரசிகர் கூட்டமே உருவாகி உள்ளது. அதை தக்க வைக்கும் விதமாக மீண்டும் அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த ஜீத்து ஜோசப் கடந்த வருடம் மோகன்லாலை வைத்து இயக்கிய நேர் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
இந்த நிலையில் தற்போது நுனக்குழி என்கிற படத்தை இயக்கியுள்ளார் ஜீத்து ஜோசப். மின்னல் முரளி பட இயக்குனரும் சமீபத்தில் வரவேற்பை பெற்ற ஜெய ஜெய ஜெய ஜெய ஹே மற்றும் குருவாயூர் அம்பலநடையில் படங்களில் ஹீரோவாக நடித்தவருமான பசில் ஜோசப் தான் இந்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். நிகிலா விமல் கதாநாயகியாக நடிக்க, மனோஜ் கே.ஜெயன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
விரைவில் இந்த படம் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் இதன் டீசர் வெளியானது. ஆச்சரியமாக இதுநாள் வரை சீரியஸான படங்களை மட்டுமே கொடுத்து வந்த ஜீத்து ஜோசப், இந்த படத்தில் முதன்முறையாக காமெடி ஏரியாவிலும் கை வைத்துள்ளார். அதேசமயம் வழக்கமான அவரது படங்களில் இருக்கும் திரில்லர் அம்சமும் குறையாமல் அதையே காமெடி பிளேவரில் கொடுக்கப் போகிறார் என்பது இந்த படத்தின் டீசரை பார்க்கும்போதே தெரிகிறது.