ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை | 28 ஆண்டுகளுக்குபின் நடிக்கும் டிஸ்கோ சாந்தி | ரம்யா கிருஷ்ணன், மன்சூர் அலிகான் கேரக்டரில் முதலில் நடித்தவர்கள் : கேப்டன் பிரபாகரன் குறித்து ஆர்.கே.செல்வமணி | கூலி : பெங்களூருவில் அதிகபட்ச கட்டணம் ரூ.2000 | 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு வரும் மெஹ்ரின் பிரதிஸ்டா | பிளாஷ்பேக்: மங்கம்மாவின் வெற்றியும், தோல்வியும் |
கடந்த வருடம் பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. அவ்வளவாக பிரபலம் இல்லாத நட்சத்திரங்கள் நடித்து மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு கிட்டத்தட்ட 230 கோடி வரை வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல காமெடி நடிகர் சவ்பின் சாஹிர் தான் இந்த படத்தை தயாரித்திருந்தார்.
அதேசமயம் இந்த படம் வெளியாகி வெற்றி பெற்ற சில நாட்களில் சிராஜ் வளையதாரா என்பவர் மஞ்சும்மேல் பாய்ஸ் பட தயாரிப்புக்காக 7 கோடி ரூபாய் கொடுத்ததாகவும் படம் வெளியாகி லாபத்தில் தனக்கு 40 சதவீதம் கொடுப்பதாக வாக்கு கொடுத்துவிட்டு தற்போது தனக்கு பணத்தை கொடுக்க மறுக்கிறார்கள் என்றும் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நேற்று (ஜூன் 20) நீதிமன்றத்தில் ஆஜராகும்படி நடிகர் சவ்பின் சாஹிருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அதேசமயம் அவரது தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற நீதிமன்றம் வரும் ஜூன் 27ம் தேதிக்குள் அவர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. அதற்கு முன்னதாக இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டுள்ளது, எனவே இதனை தள்ளுபடி செய்ய வேண்டும் என சவ்பின் சாஹிர் தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது குறிப்பிடத்தக்கது.