புதுப்பட டிரைலர் போல வெளியான 'கேப்டன் பிரபாகரன்' டிரைலர் | சூரி கிராமத்திற்குச் சென்று அன்பில் நெகிழ்ந்த ஐஸ்வர்ய லெட்சுமி | நாகார்ஜுனா - ராம் கோபால் வர்மாவின் 'சிவா' ரீ-ரிலீஸ் | சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் |
மோகன்லால் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான 'தொடரும்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதனைத் தொடர்ந்து அவர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் நடித்துள்ள 'ஹிருதயபூர்வம்' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இன்னொரு பக்கம் தெலுங்கில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'கண்ணப்பா' படமும் வரும் ஜூன் 27ல் ரிலீஸ் ஆகிறது. இது ஒரு பக்கம் இருக்க மோகன்லால், மம்முட்டி இருவரும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணைந்து நடித்த வரும் புதிய படம் ஒன்றும் தயாராகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் மகேஷ் நாராயணன் இயக்கி வருகிறார். இதில் பஹத் பாசில், குஞ்சாக்கோ போபன், நயன்தாரா ஆகியோரும் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் எட்டாவது கட்ட படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெறத் துவங்கியுள்ளது. இதற்காக நேற்று முன்தினம் மோகன்லால் இலங்கை கிளம்பி சென்றார். அங்கே அவருக்கு மிகுந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அது மட்டுமல்ல நேற்று நடைபெற்ற இலங்கை பார்லிமென்டில் நிகழ்வுகளை நேரில் பார்க்கும் விதமாக சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார் மோகன்லால். பார்லிமென்டில் அவர் பெயர் சொல்லப்பட்டு அவருக்கு வரவேற்பும் அளிக்கப்பட்டது. இது குறித்த வீடியோ ஒன்றும் தற்போது வெளியாகி உள்ளது. அது மட்டுமல்ல இலங்கை பிரதமர் டாக்டர் ஹரிணி அமர சூர்யா, சபாநாயகர் டாக்டர் ஜெகத் விக்ரமாநாயகெ, துணை சபாநாயகர் டாக்டர் ரிஷ்வி சாலிஹ் மற்றும் பார்லிமென்டில் பொது செயலாளர் குஸாணி மோகனதீரா ஆகியோரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் மோகன்லால்.