சுதந்திர போராட்ட வீரர்களை போற்றும் 'பஹேலி கீத் 2' பாடல்: முகேஷ் கன்னா வெளியிட்டார் | ஒவ்வொரு கேரக்டருக்கும் இரண்டு போஸ்டர் ; நானி பட இயக்குனரின் புதிய ஐடியா | 20 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'கூலி' டிரைலர் | திரிஷ்யம்-2 தயாரிப்பாளர் மீது பண மோசடி வழக்கு ; தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு | இயக்குனர் மீது பொய் வழக்கு ; நடிகையை தொடர்ந்து அவரது வழக்கறிஞரும் கைது | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம் | காந்தாரா 2வில் ‛கனகாவதி' ஆக ருக்மணி வசந்த் | கூலி படத்தில் அதிர்ச்சியூட்டும் இடைவேளை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட தகவல் | அஜித் 64 படத்தில் இணையும் இரண்டு நாயகிகள் | செல்வாக்கு மிக்கவர்களுக்கு கூட வளைந்து கொடுக்க மறுக்கும் சென்சார் போர்டு? |
கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் கிளம்பிய ஏர் இந்தியா விமானம் கிளம்பிய ஒரு நிமிடத்திற்குள்ளாகவே அங்கிருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானத்தில் பயணித்த ஒரே ஒரு நபரை தவிர மற்ற அனைவருமே உயிரிழந்தனர். அந்த சமயத்தில் கல்லூரி விடுதியில் மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்கள் சிலரும் துரதிஷ்டவசமாக பலியானார்கள். கிட்டத்தட்ட 270 பேர் பலியான நிலையில் அவர்களது உறவினர்களின் டிஎன்ஏ மாதிரிகளை வைத்து சோதனை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட உறவினர்களிடம் இறந்தவர்களின் உடல்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
இதில் விமானத்தில் பயணிக்காத 29 பேர் பலியாகி உள்ளதும் தெரியவந்துள்ளது. இதில் இன்னும் துரதிஷ்டவசமான அதே சமயம் ஆச்சரியம் அளிக்கும் சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. இந்த விமான விபத்து நடைபெற்ற அதே நாளில் இருந்து குஜராத்தி திரைப்பட இயக்குனரான மகேஷ் ஜிராவாலா என்பவர், வேலை விஷயமாக வெளியே சென்றிருந்தவர் தனது வீட்டிற்கு திரும்பவே இல்லை. அவர் செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவர் வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த அவரது மனைவி காவல்துறையில் புகார் செய்ததுடன் அவரது செல்போன் டவர் கடைசியாக எங்கே இருந்தது என்று ஆராய்ச்சி செய்தபோது அது விமான விபத்து நடந்த இடத்திற்கு 700 மீட்டர் தொலைவில் இருந்தது தெரிய வந்துள்ளது.
இதை வைத்து ஒருவேளை அந்த விபத்தில் தனது கணவருக்கும் ஏதேனும் நடந்திருக்குமோ என்று அவர் அச்சம் தெரிவித்தார். அதை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக தங்கள் குடும்பத்தின் டிஎன்ஏ மாதிரிகளையும் மருத்துவமனையில் கொடுத்தார். இந்த நிலையில் அவர் கொடுத்த டிஎன்ஏ மாதிரிக்கு ஏற்றபடி அங்கே கருகி இருந்த உடல் ஒன்றின் டிஎன்ஏ சரியாக பொருந்திப் போனது. அதனால் அது மகேஷ் ஜிராவாலாவுடையது தான் என உறுதிப்படுத்தப்பட்டது. இருந்தாலும் அவர்களது குடும்பத்தினர் இதை நம்ப தயாராக இல்லை.
இந்த சமயத்தில் தான் மகேஷ் ஜிராவாலா ஓட்டி வந்த அவருடைய ஆக்டிவா ஸ்கூட்டரும் அந்த விபத்தில் ஏற்பட்ட தீயில் கருகியது தெரிய வந்தது. அதில் இருந்த எஞ்சின் நம்பர், சேஸ் நம்பர் ஆகியவற்றை வைத்து இறந்தது மகேஷ் ஜிராவாலா தான் என உறுதி செய்த போலீசார் அவரது உடலை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்தனர். இது அவர்களது குடும்பத்தினர் இடையேயும் திரையுலக வட்டாரத்திலும் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.