சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ரஜினி நடிப்பில் தான் இயக்கி உள்ள கூலி படம் வருகிற 14ஆம் தேதி திரைக்கு வரும் நிலையில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மேலும், கூலி படத்தில் மூன்று நிமிடம் ரஜினிகாந்த் இடைவிடாமல் ஆவேசமாக வசனம் பேசும் ஒரு காட்சி இடம் பெற்றிருப்பதாக ஏற்கனவே அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் படத்தின் இடைவேளை திருப்புமுனையாக, அனைவருக்கும் அதிர்ச்சி கொடுக்கக் கூடியதாகவும் இருக்கும். இதுவரை யாரும் இப்படி ஒரு இடைவேளை காட்சியை வைக்க முயற்சி செய்யவில்லை. அதை நான் செய்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இது படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.
கேரளாவில் முன்பதிவு அமோகம்
இதனிடையே கேரளாவில் இன்று காலை 11 மணிக்கு கூலி படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கி ஒரு மணி நேரத்தில் ஒரு கோடி ரூபாய்க்கான டிக்கெட்டுகள் விற்று தீர்த்துள்ளன. தமிழ்நாட்டைப் போலவே கேரளாவிலும் ரஜினியின் கூலி படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. ரஜினி நடித்த ஜெயிலர் படம் கேரளாவில் 50 கோடி ரூபாய் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.