தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
ரஜினிகாந்த், சத்யராஜ், நாகார்ஜுனா, உபேந்திரா, ஆமிர்கான், சவுபின் ஷாகிர், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அடுத்த வாரம் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ள படம் 'கூலி'. இப்படத்தின் டிரைலர் கடந்த வாரம் வெளியானது.
24 மணி நேரத்தில் ரஜினியின் முந்தைய சாதனையான 'ஜெயிலர்' டிரைலரின் சாதனையை இப்பட டிரைலர் முறியடித்தது. விஜய்யின் 24 மணி நேர டிரைலர் சாதனையை முறியடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடக்கவில்லை. தற்போது 'கூலி' தமிழ் டிரைலர் 20 மில்லியன் பார்வைகளை யு டியூப் தளத்தில் கடந்துள்ளது.
ஹிந்தி டிரைலர் 2 யு டியூப் தளங்களில் 9 மில்லியன் பார்வைகளையும், தெலுங்கு டிரைலர் 7 மில்லியன் பார்வைகளையும் பெற்றுள்ளது. நேற்று மாலை இப்படத்தின் கன்னட டிரைலர் வெளியாகி அது 2 லட்சம் பார்வைகளைக் கடந்துள்ளது.
'கூலி' படத்தின் பாடல்களில் 'மோனிகா' தமிழ் பாடல் 59 மில்லியன் பார்வைகளையும், தெலுங்குப் பாடல் 18 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது. மற்ற பாடல்களை விடவும் இந்தப் பாடலுக்கு அதிக வரவேற்பு உள்ளது.