கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

ஒரு படம் நன்றாக இருந்தால் அந்த படம் வெற்றி பெறும் என தெரிந்தால் அந்த படத்தை ரிலீசுக்கு சில நாட்களுக்கு முன்பே மீடியாவினர், சினிமாகாரர்களுக்கு அந்த படக்குழு போட்டு காண்பிக்கும். அந்தவகையில் ஒருநாள் கூத்து, மான்ஸ்டர், பர்ஹானா படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் அடுத்த படமான டிஎன்ஏ படத்தின் சிறப்பு காட்சி நேற்று சென்னையில் நடந்தது.
படம் முடிந்த பின் பேசிய ஹீரோ அதர்வா, படம் பார்த்தவர்கள் பாராட்டிக் கொண்டே இருக்கிறார்கள். அது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு காரணமான இயக்குனர், ஹீரோயின் உள்ளிட்ட படக்குழுவுக்கு நன்றி. இந்த படத்தை புதிதாக திருமணம் ஆனவர்கள், குழந்தை பெற்றெடுத்தவர்களுக்கு அர்ப்பணிக்கிறோம். காரணம், படத்தின் கதை அப்படி என்றார்.
ஹீரோயின் நிமிஷா சஜயன் பேசுகையில் ''படத்தில் நான் நடித்த அம்மா பாசம் சீன், குழந்தை சீன்களுக்கு அவ்வளவு வரவேற்பு. இந்த படத்தின் கதை, கேரக்டர், எமோஷன் அனைவரையும் சென்றடைந்துள்ளது. மகிழ்ச்சி. படம் பார்த்தவர்கள் எனக்கு விருது கிடைக்கும் என்று சொல்கிறார்கள். கூடுதல் மகிழ்ச்சி. விருதும் கிடைக்க வேண்டும். தமிழில் அடுத்தடுத்த படங்களும் கிடைக்க வேண்டும்'' என்றார்.




