சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் நடித்து கடந்த 2019ம் ஆண்டு வெளியான படம் வார். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கடந்த வருடத்திலிருந்து வார் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இதில் ஹிருத்திக் ரோஷனுக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி நடித்துள்ளார்.
யஷ் ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தை அயன் முகர்ஜி இயக்கியுள்ளார். ஆகஸ்ட் 14ம் தேதியன்று திரைக்கு வருகிறது. தற்போது இந்த படத்தில் சர்ப்ரைஸாக 'ஜனாபே ஆலி' என்ற பாடலின் முன்னோட்ட வீடியோவை வெளியிட்டுள்ளனர். இதில் நடனத்திற்கு பெயர் போன ஹிருத்திக், ஜூனியர் என்டிஆர் இருவரும் ஆடி உள்ளனர். இது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம் முழு பாடலை வெளியிடவில்லை. முழு பாடலை தியேட்டரில் காணுங்கள் என ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியுள்ளனர்.