டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாள நடிகர் சங்கத்திற்கு வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. கடந்த 30 வருட காலகட்டத்தில் இப்போதுதான் முறையாக தலைவர் பதவிக்கு ஒரு பெண் அதாவது நடிகை ஸ்வேதா மேனன் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் ஆணாதிக்கம் கொண்ட பலர் அவர் போட்டியிடுவதை தடுக்க முயற்சித்தனர். அது முடியவில்லை. ஆனால் தேர்தலுக்கு முன்பாக அவரது பெயரையும் புகழையும் குலைக்கும் விதமாக எப்போதோ சில மாதங்களுக்கு முன் ச்வ்வ்தா மேனன் அளித்த ஒரு பேட்டி தொடர்பாக இப்போது அவருக்கு எதிராக காவல் நிலையத்தில் ஒரு நபர் மூலமாக புகார் அளித்ததாகவும் அதன் காரணமாக ஸ்வேதா மேனன் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது என்றும் சமீபத்தில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் இதே கருத்தை முன்வைத்து, விரைவில் நடிகர் சங்க தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தன் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக இப்படி ஒரு வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இதனை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்றும் ஸ்வேதா மேனன் கேரளா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.ஜி அருண் இந்த வழக்கை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளார்.
“இந்த புகாரானது மிகவும் குறுகிய காலத்தில் பதியப்பட்டு விரைவாக எப்ஐஆர் போடப்பட்டுள்ளது. முறைப்படியான போலீஸ் விசாரணை எதுவும் இன்றி அவசர கதியில் இந்த எப் ஐ ஆர் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது அதனால் ஸ்வேதா மேனன் மீதான விசாரணையை தற்சமயம் நிறுத்தி வைக்கும்படியும் உத்தரவிடுவதாக நீதிபதி கூறியுள்ளார் அந்த வகையில் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் ஸ்வேதா மேனனுக்கு வெற்றிக்கு குறுக்கே விழுந்த மிகப்பெரிய தடையும் நீங்கி விட்டது.. கிட்டத்தட்ட அவரது வெற்றி உறுதியாகிவிட்டது என்றே சொல்கிறார்கள்.




