பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

பஹத் பாசில் நடிப்பில் கடந்த வருடம் வெளியான 'ஆவேசம்' திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று 100 கோடி வசூல் கிளப்பிலும் இணைந்தது. அதைத் தொடர்ந்து 'வேட்டையன்' படத்தில் ரஜினியுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 'புஷ்பா 2' திரைப்படம் வெளியானது. அடுத்ததாக வடிவேலு, பஹத் பாசில் இருவரும் இணைந்து நடித்துள்ள 'மாரீசன்' ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. அதேபோல மலையாளத்தில் பஹத் பாசில் நடித்துள்ள 'ஓடும் குதிரை சாடும் குதிரை' படப்பிடிப்பு முடிந்து அந்த படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.
அதே சமயம் கடந்த வருடம் பிப்ரவரி மாதமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட 'கராத்தே சந்திரன்' திரைப்படம் குறித்த தகவல்கள் எதுவும் அதன்பிறகு வெளியாகவில்லை.. ஒருவேளை அந்த படம் கிடப்பில் போடப்பட்டதா என்கிற சந்தேகமும் ரசிகர்களுக்கு எழுந்தது. இந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் 60 நாட்கள் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது என்றும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது. பஹத் பாசில் சில வருடங்களுக்கு முன்பு சரிவில் இருந்தபோது அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்த படம் 'மகேஷிண்டே பிரதிகாரம்'. இந்த படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய ராய் என்பவர் தான் இந்த கராத்தே சந்திரன் படத்தை இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.