தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

நடிகரும், சமையல்கலை நிபுணருமான மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா பாலியல் புகார் கூறியிருந்தார். தன்னை திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தாயாகி விட்டு சென்று விட்டார் என்பது அந்த குற்றச்சாட்டு. மாதம்பட்டி ரங்கராஜும், ஜாய் கிரிசில்டாவும் ஏற்கெனவே திருமணமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாய் கிரிசில்டாவுக்கு தற்போது குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை என்னுடையது என்பதை மருத்துவ ரீதியாக நிரூபித்தால் குழந்தையை ஏற்றுக் கொள்ளத் தயார் என்று ரங்கராஜ் கூறியுள்ளார். இந்த வழக்கு நடந்து வருகிறது.
இதற்கிடையில் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரங்கராஜ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ''ஜாய் கிரிசில்டாவுக்கு தற்போது பிறந்துள்ள குழந்தை, ரங்கராஜூக்குத்தான் பிறந்தது என்றால் அந்த குழந்தையை வாழ்நாள் முழுவதும் ஏற்றுக்கொள்ள ரங்கராஜ் தயாராக இருக்கிறார். ஆனால் கிரிசில்டாவின் நோக்கம் வேறு மாதிரியாக உள்ளதால் தான் இதுபோல அவதூறு பரப்பி நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்துகிறார்.
எனவே, அந்த குழந்தைக்கு மரபணு பரிசோதனை நடத்த உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக சமூக வலைதளங்களில், யூடியூப் இஷ்டம்போல செய்தி வெளியிட தடை விதிக்க வேண்டும்'' என்று வாதிட்டார். கிரிசில்டா தரப்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வருகிற 14ம்தேதிக்குள் வாதங்களை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தது.




