டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

மலையாளத்தில் மோகன்லால் - ஜீத்து ஜோசப் கூட்டணியில் 2013ல் வெளியான திரிஷ்யம் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாது ஹிந்தியிலும் அந்த படம் ரீமேக் செய்யப்பட்டது. கிட்டதட்ட ஏழு ஆண்டுகள் கழித்து, கடந்தாண்டு வெளியான அதன் இரண்டாம் பாகமும் முதல் பாகத்தைப் போலவே வெற்றி பெற்றது. தற்போது ஹிந்தியிலும் இந்த படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தில் நடித்த அஜய் தேவ்கன் நடிப்பில் ரிலீசாகி அங்கேயும் மிகப்பெரும் வரவேற்பையும் வெற்றியையும் பெற்றுள்ளது.
இந்தநிலையில் மீண்டும் சோசியல் மீடியாவில் திரிஷ்யம்-3 படம் குறித்த பேச்சுக்கள் வலம் வர துவங்கியுள்ளன. அதன்படி திரிஷ்யம் படத்தின் மூன்றாம் பாகம் மலையாளத்திலும் ஹிந்தியிலும் மோகன்லால் மற்றும் அஜய் தேவ்கன் நடிப்பில் படமாக்கப்பட்டு ஒரே சமயத்தில் ரிலீஸ் செய்யப்படும் என்றும் இதுகுறித்து அதன் தயாரிப்பாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் ஒரு தகவல் வெளியானது.
காரணம் மலையாளத்தில் மூன்றாம் பாகம் முதலிலேயே வெளியாகி விட்டால் ஹிந்திக்கு வருவதற்குள் அதன் சஸ்பென்ஸ் ரசிகர்கள் பலருக்கும் தெரிந்த ஒன்றாகிவிடும் என்றும் சொல்லப்பட்டது. இதுகுறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் ஜீத்து ஜோசப்பிடம் கேட்டபோது இந்த தகவலில் எந்த உண்மையும் இல்லை என்று மறுத்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி மூன்றாம் பாகத்திற்கான கிளைமாக்ஸ் குறித்த ஒரு ஐடியா மட்டுமே தன்னிடம் உள்ளது என்றும் அதை வைத்து அந்த படத்திற்கான முழுக்கதையும் தயார் செய்ய இன்னும் சில காலம் பிடிக்கும் என்றும் கூறியுள்ளார். மேலும் தற்போது மோகன்லாலை வைத்து தான் இயக்கியுள்ள ராம் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளில் பிஸியாக இருப்பதால் திரிஷ்யம் 3 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் முழுமையான கவனம் செலுத்த முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
தவிர இந்த மூன்றாம் பாகத்துடன் இந்த கதை முடிந்துவிடும் என்றும் இதற்கு மேல் அதை தொடர்ந்து நீட்டிக்கும் எண்ணம் நிச்சயம் இல்லை என்றும் கூறியுள்ளார் ஜீத்து ஜோசப். அதுமட்டுமல்ல அப்படியே இந்த படம் தயாரானாலும் வழக்கம் போல மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.




