காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மலையாள திரையுலகின் முன்னணி இயக்குனர் ஜீத்து ஜோசப். மலையாளம் மட்டும் இன்றி தென்னிந்திய அளவில் ஏன் பாலிவுட்டிலும் கூட தனது திரிஷ்யம் படங்களின் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர். அதே சமயம் படத்தை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் வேகமாக முடிக்கும் அளவிற்கு விறுவிறுப்பாக செயல்படும் ஜீத்து ஜோசப் பெரிய நடிகர், சிறிய நடிகர் என பாரபட்சம் பார்க்காமல் படங்களை இயக்கி வருகிறார்ர் அந்த வகையில் மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர் திரைப்படம் வரும் டிசம்பர் 21ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது.
அதே சமயம் கடந்த நவம்பர் மாதம் நுணக்குழி என்கிற படத்தை இயக்கத் தொடங்கினார் ஜீத்து ஜோசப். படப்பிடிப்பு ஆரம்பித்த ஒரு மாதத்திலேயே இந்த படத்தை இயக்கி முடித்து விட்டார் ஜீத்து ஜோசப். இந்த படத்தின் கதாநாயகனாக மின்னல் முரளி பட இயக்குனரும் ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தில் கதாநாயகனாக நடித்தவருமான பஷில் ஜோசப் நடித்துள்ளார். ஜீத்து ஜோசப்புடன் இணைந்து ஏற்கனவே டுவல்த் மேன், கூமன் ஆகிய படங்களுக்கு கதை எழுதிய கே.ஆர் கிருஷ்ணகுமார் இந்த படத்திலும் இணைந்து கதை எழுதி உள்ளார்.