போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் | லெஸ்பியனாக இருந்தேன்: டைட்டானிக் ஹீரோயின் ஓப்பன் டாக் | சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணையும் கல்யாணி |

பிரபாஸ் நடிப்பில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வரும் டிச-22ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் சலார். கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் டைரக்சனில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் வில்லன் கலந்த நண்பனாக நடித்துள்ளார் பிரித்விராஜ். இந்த படத்தில் நடித்ததில் இருந்து இருவருக்கும் நெருங்கிய நட்பு உருவாகிவிட்டது. எந்த அளவிற்கு என்றால் இந்த உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் பிரபாஸுக்கு போன் செய்து ஒரு தேவை என்று சொன்னால் உடனடியாக அதை நிறைவேற்றித் தருவார் என்று கூறுகிறார் பிரித்திவிராஜ்.
மேலும் பிரபாஸ் பற்றி அவர் கூறும்போது, “பிரபாஸ் தன்னை சுற்றியுள்ள அந்த புகழ் வெளிச்சம் பற்றிய எண்ணமே இல்லாமல் இருக்கிறார். அந்த அளவிற்கு தன்னுடன் பழகுபவர்களை வசதியாக வைத்துக் கொள்கிறார். பிரபாஸ் பற்றி முழுமையாக ஒருவர் அறிந்து கொண்டால் நிச்சயம் அவரிடம் நட்பு பாராட்டாமல் இருக்க முடியாது” என்றும் கூறியுள்ளார்.
இது மட்டுமல்ல படப்பிடிப்பின் போது பிரித்விராஜூக்கு வழங்கப்பட்ட கேரவனை தன்னுடைய கேரவனை போன்றே மாற்றி தரும்படி அதன் வடிவமைப்பாளருக்கு உத்தரவிட்டு மாற்றி கொடுத்தாராம் பிரபாஸ்.