தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் இன்று வெளியான படம் 'சித்தாரே ஜமீன் பர்'. கடந்த 2007ல் அமீர்கான் நடித்து இயக்கி வெளியான 'தாரே ஜமீன் பர்' படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படத்தை ஆர் எஸ் பிரசன்னா என்பவர் இயக்கியுள்ளார். இதனை தொடர்ந்து படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் நடிகர் ஷாருக்கான், சித்தாரே ஜமீன் பர் படக்குழுவினரை அவர்களது செட்டுக்கு நேரில் வந்து சந்தித்து பாராட்டி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பாலிவுட்டின் மும்மூர்த்திகள் என அழைக்கப்படும் மூன்று கான் நடிகர்களான அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் இவர்கள் மூவருமே எந்தவித பந்தாவும் ஈகோவும் இன்றி ஒருவரது படத்தை மற்றொருவர் பாராட்டுவதுடன் அவர்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு உற்சாகப்படுத்துவதையும் வாடிக்கையாக வைத்துள்ளனர். அதை ஷாருக்கான் இப்போதும் நிரூபித்துள்ளார்.