மம்முட்டி மோகன்லாலின் 'பேட்ரியாட்' டீசர் வெளியானது ; ரசிகர்களுக்கு ட்ரீட் உறுதி | திருமண நிச்சயதார்த்த தேதியை அறிவித்த அல்லு சிரிஷ் | ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும் அஜித்குமார்! | 'மன சங்கர வர பிரசாத் கரு' படத்தின் நயன்தாரா பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராம்சரண் ஒரு உண்மையான ஜென்டில்மேன் என்கிறார் ஜான்வி கபூர்! | இட்லிகடை படத்தின் முதல் நாள் வசூல்? 100 கோடியை அள்ளுமா? | விஜயை கைது செய்யணுமா? நடிகர் பார்த்திபன் பதில் இதுதான் | டிச.,5ல் ரிலீசாகும் பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2: தாண்டவம்' | தென்தமிழகத்து இளைஞர்களின் கதை 'பைசன்': இயக்குனர் மாரி செல்வராஜ் | ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ் |
ஈ அடிச்சான் காப்பி என சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இங்கே ஒரு ஈயை காப்பி அடித்ததாக கூறி மலையாள திரைப்பட குழுவினர் சட்டபூர்வமான நடவடிக்கைகளை எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கின்றனர். மலையாளத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு 'லவ்லி' என்கிற திரைப்படம் வெளியானது. 'லியோ' படத்தில் விஜய்யின் மகனாக நடித்த மலையாள நடிகர் மேத்யூ தாமஸ் தான் இந்த படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு பெண் கதாபாத்திரமாக ஈ ஒன்று சித்தரிக்கப்பட்டிருந்தது. படம் முழுவதும் அந்த ஈ கதாபாத்திரம் வருவதுபோல் விஎப்எக்ஸ் முறையில் உருவாக்கப்பட்டிருந்தது.
படம் வெளியாகி அவ்வளவாக வரவேற்பு பெறவில்லை. அதே சமயம் இந்த படம் குறித்த போஸ்டர்கள், டீசர், பாடல்கள் வெளியான போதே ஏற்கனவே சில வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான 'ஈகா' (தமிழில் 'நான் ஈ' என்ற பெயரில் வெளியானது) படத்தின் சாயல் தெரிகிறது என்று பலரும் கூறி வந்தனர். ஆனால் லவ்லி படக்குழுவினர் கதையில் நிறைய மாற்றம் இருக்கின்றது என்று பதில் அளித்தனர். படம் வெளியான பிறகு இரண்டு படங்களுக்கு சம்பந்தமில்லை என்பது தெரிய வந்தாலும் தற்போது படம் ஓடிடியில் வெளியாகி உள்ள நிலையில் புதிய பிரச்னை ஒன்று கிளம்பி உள்ளது.
தங்களது ஈகா படத்தில் பயன்படுத்தப்பட்ட ஈயின் உருவ அமைப்பை காப்பியடித்து லவ்லி படக்குழுவினர் தங்களது ஈ கதாபாத்திரத்தை உருவாக்கி இருப்பதாக ஈகா பட தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தற்போது லவ்லி படக்குழுவிற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதே சமயம் இது குறித்து லவ்லி படத்தின் இயக்குனர் திலீஷ் நாயர் கூறும்போது, “ஈகா பட தயாரிப்பு தரப்பில் இருந்து இப்படி ஒரு குற்றம் சுமத்தி இருப்பது ரொம்பவே வருத்தமடைய செய்கிறது. எங்களது தொழில்நுட்ப குழுவினர் கிட்டத்தட்ட மூன்று மாத காலமாக இந்த ஈ உருவத்தை வடிவமைப்பதற்காக கடுமையாக உழைத்துள்ளனர். அதிலும் குறிப்பாக நடிகை உன்னிமாயா பிரசாத்தின் முகத்தை அடிப்படையாக வைத்து மோஷன் கேப்சரிங் முறையில் இந்த ஈ கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் ஒரு குடும்பப்பாங்கான பெண் ஈ கதாபாத்திரமாகவே இதை உருவாக்கி இருக்கிறோமே தவிர ஈகா படத்தில் வருவது போல ஆண் ஈ கதாபாத்திரமாக அல்ல” என்று கூறியுள்ளார்.