மீண்டும் ஹிந்தியில் கீர்த்தி சுரேஷ் | என் அழகான வாழ்க்கை துணை கெனிஷா : ரவி மோகன் அறிவிப்பு | ''பிள்ளைகளுக்காகவே வாழ்கிறேன்; என்னை தங்க முட்டையாகவே பார்த்தனர்'': ரவி மோகன் 'ஓபன் டாக்' | பாலகிருஷ்ணாவிற்கு கதை கூறிய ஆதிக் ரவிச்சந்திரன் | கிஸ் படம் ஜூலை மாதம் வெளியாகிறது | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் | ஈகாவுக்கும், லவ்லிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை : லியோ பட இளம் நடிகர் விளக்கம் | சூரியின் நட்புக்காக மாமன் கேரள புரமோஷனில் கலந்துகொண்ட உன்னி முகுந்தன் | மோகன்லால் பட ரீமேக் : கல்யாணி பிரியதர்ஷனின் வித்தியாசமான ஆசை | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ரஜினியை சந்தித்த கேரள அமைச்சர் |
மலையாள திரையுலகில் பஹத் பாசிலின் கும்பலாங்கி நைட்ஸ் என்கிற படத்தின் மூலம் இளம் நடிகராக அறிமுகமானவர் மேத்யூ தாமஸ். அதைத்தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில், நல்ல கதாபாத்திரங்களில் நடித்து தற்போது குறிப்பிடத்தக்க இளம் நடிகராக வளர்ந்து வருகிறார்.
தமிழில் லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்தது இவர்தான். தனுஷ் இயக்கத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம படத்திலும் கூட முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றவர். இந்த நிலையில் இவர் மலையாளத்தில் தற்போது நடித்துள்ள லவ்லி திரைப்படம் நாளை (மே 16) வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் டிரைலர் வெளியானபோதே பலரும் ஆச்சரியப்பட்டார்கள். காரணம் ராஜமவுலி இயக்கத்தில் நானி, சமந்தா நடிப்பில் வெளியான ஈகா படத்தில் எப்படி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஈ ஒன்று நடித்திருந்ததோ அதேபோல இந்த படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஈ நடித்துள்ளது. அதில் கதாநாயகியை தேடி வரும். இந்த லவ்லி படத்தில் கதாநாயகனை தேடி வருகிறது. அவ்வளவுதான் வித்தியாசம் .அதனால் அதே போன்ற படம் தானோ என்கிற எண்ணம் பலருக்கும் ஏற்பட்டது.
சமீபத்தில் இதுகுறித்து மேத்யூ தாமஸ் கூறும்போது, “ஈகா படத்திற்கும் லவ்லி படத்திற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஈகா திரைப்படம் கிட்டத்தட்ட ஒரு ஆக்ஷன் திரில்லராக உருவாகி இருந்தது. அது மட்டுமல்ல, அதில் நடித்திருந்த ஈ கதாபாத்திரம் ஒரு ஹீரோவை போல அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் எங்களுடையது அப்படிப்பட்டது அல்ல. இந்த படத்தில் லவ்லி என்கிற பெயரில் வரும் ஈ கதாபாத்திரம் நமது பக்கத்து வீட்டில் இருக்கும் பெண் போன்ற நெருக்கமான, அன்பான, இனிமையான ஒரு கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டுள்ளது. நிச்சயம் படம் பார்ப்பவர்களை இந்த லவ்லி கவரும்” என்று கூறியுள்ளார்..