அல்லு அர்ஜுன் - அட்லி இணையும் படத்தில் சர்வதேச நடிகைகளா? | 'விடாமுயற்சி' வசூலைக் கடந்த 'டிராகன்' | 7.47 கோடி ரூபாய் வாட்ச் அணியும் ஜுனியர் என்டிஆர் | தனுஷ் இல்லாமல் 'வட சென்னை 2': வெற்றிமாறன் முடிவு | 2025 அற்புதமான ஆண்டாக இருக்கும் : மாளவிகா மோகனன் | நடிகை சவுந்தர்யா மரணம் விபத்தல்ல... கொலை : மோகன்பாபுவை தொடர்புபடுத்தி சமூக ஆர்வலர் புகார் | மூன்றாவது முறையாக இணையும் விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி | தமிழில் வெளியாகும் ஹிந்தி படம் | 32 துறைகளை கையாண்டு ஒரு படம் உருவாக்கிய பெண் இயக்குனர் | சசிகுமார் படத்தில் இரண்டு நாயகிகள் அறிமுகம் |
மலையாளத்தில் பஹத் பாசில் நடித்த கும்பலாங்கி நைட்ஸ் படத்தின் மூலம் இளம் நடிகராக அறிமுகமானவர் மேத்யூ தாமஸ். அதன் பிறகு தொடர்ந்து முக்கிய பாத்திரங்களில் நடித்து வந்த மேத்யூ தாமஸ் இரண்டு வருடங்களுக்கு முன்பு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் விஜய்யின் மகனாக நடித்து தமிழிலும் பிரபலமானார்.
சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிற படத்திலும் நகைச்சுவை நடிப்பில் பிரமாதப்படுத்தினார். இந்த நிலையில் மலையாளத்தில் இவரது நடிப்பில் லவ்லி என்கிற திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் தற்போது வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. காரணம் இந்த படத்தில் நாயகி கதாபாத்திரத்தில் ஒரு ஈ நடித்துள்ளது.
இந்த டீசரில் மேத்யூ தாமஸ் அந்த ஈயுடன் பேசுவதை பார்க்கும்போது கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜமவுலி இயக்கத்தில் சமந்தா, நானி நடித்த நான் ஈ படத்தை பார்ப்பது போலவே இருக்கிறது. அதில் நாயகன் ஈயாக வந்தார். இதில் நாயகி ஈயாக வருகிறார். அந்த படத்தின் உல்டாவாக தான் இந்த படம் உருவாகி இருப்பது போல தெரிகிறது.
திலீஷ் கருணாகரன் என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார். 3டியில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரபல இயக்குனரான ஆஷிக் அபு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். குழந்தைகளை கவரும் படமாக இது உருவாகி இருப்பதால் வரும் ஏப்ரல் நான்காம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.