துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
அஞ்சலியின் 50வது படம் ஈகை. அவருடன் சந்தோஷ் பிரதாப், பாரதிராஜா , சுனில், பொன்வண்ணன், ஆர்.சுந்தர்ராஜன், 'விருமாண்டி' அபிராமி, புகழ் உள்பட பலர் நடிக்கிறார்கள். அறிமுக இயக்குனர் அசோக் வேலாயுதம் இயக்குகிறார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்கிறார், தருண் குமார் இசை அமைக்கிறார்.
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: சாதிக்க துடிக்கிற ஒரு இளம் பெண்ணின் போராட்டம்தான் படத்தின் கதை. நயன்தாராவிற்கு 'அறம்' படம் அமைந்தது போல அஞ்சலிக்கு இந்த படம் அமையும். மும்பையில் இருந்து சட்டம் படிக்க சென்னை வரும் அவருக்கு இங்கு ஒரு பிரச்னை அதனை அவர் எப்படி கையாள்கிறார் என்பதுதான் படத்தின் கதை. நம் கண்ணுக்கு தெரியாத எத்தனையோ புரட்சி பெண்கள் இருக்கிறார்கள் அவர்களில் ஒருத்தியின் கதை இது.
நாம் கடந்து செல்லும் எளிய மனிதனுக்குள்ளும் ஒரு பெரிய வாழ்க்கை புதைந்திருக்கும். அப்படி ஒரு வாழ்க்கையையும் இந்தக் கதை பேசும். அதைப் போல சிலர் நூறு வருஷம் வாழ்ந்திருப்பார்கள். ஆனாலும் அவர்கள் வாழ்க்கையில் மாற்றமோ, முன்னேற்றமோ நிகழ்ந்திருக்காது. அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கைக்கும் தீர்வு சொல்கிற படமாகவும் இருக்கும். என்றார்.