அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
கோயம்புத்தூரை சேர்ந்தவர் அதுல்யா ரவி. 'காதல் கண்கட்டுதே' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன்பிறகு சுட்டுபிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, நாடோடிகள் 2, எண்ணி துணிக, வட்டம், காடவர் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது 'டீசல்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
அதுல்யா கோவையில் உள்ள வடவள்ளி மருதம் சாலையில் உள்ள வீட்டில் தனது தாயார் விஜயலட்சுமியுடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் இவரது வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பாஸ்போர்ட் மற்றும் 2 ஆயிரம் ரொக்க பணத்தை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அதுல்யாவின் தாய், வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதுல்யாவின் வீட்டில் வேலை பார்க்கும் செல்வி தனது தோழியான சுபாஷினியுடன் இணைந்து பாஸ்போர்ட்டையும், பணத்தையும் திருடியது தெரியவந்தது. சம்பளம் தொடர்பாக அதுல்யாவுக்கும், பணிப்பெண்ணுக்கும் தகராறு இருந்து வந்ததாகவும், அந்த கோபத்தில் அதுல்யா வெளிநாடு செல்வதை தடுக்க பாஸ்போர்ட்டை திருடியதும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.