ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சந்தான பாரதி இயக்கத்தில் 1991ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளிவந்த படம் குணா. கமல்ஹாசன், ரோஷினி, ரேகா, ஜனகராஜ், அஜய் ரத்னம், எஸ்.வரலட்சுமி, கிரீஷ் கர்னாட் , எஸ். பி. பாலசுப்பிரமணியம், சரத் சக்சேனா, காகா ராதாகிருஷ்ணன், பிரதீப் சக்தி, அனந்து ஆகியோர் நடித்தனர். இளையராஜா இசையமைத்து இருந்தார்.
33 வருடங்கள் கடந்த பின்னரும் கமல்ஹாசன் ரசிகர்கள் மட்டுமின்றி தலைமுறை கடந்து இன்றைய இளம் தலைமுறை குணா படத்தையும், அதில் இடம்பெற்றுள்ள வசனங்களையும், பாடல்களையும் நினைவூட்டி கொண்டாடி வருகின்றனர். இந்த வருடம் தொடக்கத்தில் மலையாள படமான மஞ்சும்மேல் பாய்ஸ், ரூ.200 கோடி வசூலை குவித்தது. இந்த படத்தின் கதைக்களம் அமைந்த குணா குகை மற்றும் கண்மணி அன்போடு காதலன் பாடல் ஆகியவை வெற்றிக்கான முக்கிய காரணியாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் கமல்ஹாசனின் ரசிகர்களின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் குணா திரைப்படம் டிஜிட்டல் வடிவத்தில் மெருகூட்டப்பட்டு வரும் ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ் திரைப்பட ஆடியோ உலகில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நிறுவனமாக, திகழ்ந்து வந்த பிரமிட் ஆடியோ குரூப் நிறுவனம் குணா படத்தை உலகம் முழுவதும் வெளியிட உள்ளது.