'டாக்சிக்' படத்தின் அனுபவம் குறித்து ருக்மணி வசந்த்! | விஜய் முடிவை மாத்தணும்.. மீண்டும் நடிக்கணும்: நடிகர் நாசர் கோரிக்கை | 'ஜனநாயகன்' பாடல் வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது என்ன? மறந்தது என்ன? | தியேட்டரை மட்டும் நம்பாதீங்க: 2025 சொல்லி கொடுத்த பாடம் | மலேசியாவில் மிரட்டிய 'ஜனநாயகன்' : 'பராசக்தி' படத்துக்கு பிரஷர் | சம்பள விஷயத்தில் 'கண்டிஷன்' போடும் நடிகை | அவமானங்களுக்கு 'ரியாக்ட்' பண்ணாதீர்கள்: நடிகர் சூரி 'அட்வைஸ்' | பாடல்களாய் உலகம் சுற்றுவேன் | 'கொம்புசீவி' தயாராகும் இன்னொரு தனுஷ் | உரிமைக்குரல், வானத்தைப்போல, மெய்யழகன் - ஞாயிறு திரைப்படங்கள் |

இசை அமைப்பாளர் இளையராஜாவுக்கு அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் தற்போது உள்ள முன்னணி இசை அமைப்பாளர்கள் கலந்து கொள்ளவில்லை. அவர்களை அழைக்க வேண்டாம் என்று இளையராஜா தரப்பில் இருந்து வேண்டுகோள் வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இளையராஜாவுக்கு நடந்த பாராட்டு விழா குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: இசை உலகில் தமிழுக்கும், தமிழருக்கும் மட்டுமின்றி, தமிழ்நாட்டுக்கே தனி பெருமையை தேடி தந்தவர் இசைஞானி. இமாலய சாதனையும், எளிமையும் ஒருங்கே அமைந்த மாமனிதர் அவர்.
சாஸ்திரிய சங்கீதம், மேற்கத்திய செவ்வியல் இசை, மக்கள் இசை ஆகியவற்றுக்கு நிலவிய வேறுபாடுகளை, தனது இசையின் வழியே ஒன்றாக்கிய இசை மேதை அவர். குறிப்பாக, திரை இசையை கடந்து, முழுமையான மேற்கத்திய செவ்வியல் இசையில் (சிம்பொனி) அவர் நிகழ்த்தி இருக்கும் சிம்பொனி என்ற சாதனை, ஒவ்வொரு இசைக் கலைஞருக்கும் இசைத்துறையில் புதுமை செய்ய ஊக்கமளிக்கக் கூடிய சாதனையாக இருக்கிறது. அவரை பார்த்து வளர்ந்த கலைஞன் என்பதில் எப்போதும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி.
இந்த கொண்டாட்டத்தில் பங்கெடுத்துக் கொள்வதில், உங்களை போலவே நானும் பேருவகை கொள்கிறேன். இசைஞானி இளையராஜாவின் பொன்விழா ஆண்டை தமிழக அரசே ஒருங்கிணைத்து கொண்டாடியதில், இளையராஜாவுக்கு மட்டுமே ஆன விழாவாக இல்லாமல், ஒட்டுமொத்த இசைக் கலைஞர்களுக்குமான அங்கீகாரமாக பார்க்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.