இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார் விஜய். அக்டோபரில் படம் திரைக்கு வர உள்ளது. அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிக்க போகிறார். இதுஒருபுறம் இருக்க மற்றொருபுறம் தனது மக்கள் இயக்கத்தை அரசியல் பயணத்தை நோக்கி நகர்த்தி வருகிறார். தொடர்ந்து மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். கடந்த இரு மாதங்களில் அவர்களை இரண்டு முறை சந்தித்து பேசினார். இடையில் தொகுதி வாரியாக 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.
இந்நிலையில் மக்கள் இயக்கத்தின் சமூக ஊடக பிரிவுவை பலப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சென்னையை அடுத்த பனையூரில் இன்று(ஆக., 26) நடந்தது. இதில் மாநிலம் முழுக்க இருந்து வந்திருந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். விஜய் ஊரில் இல்லாததால் இந்த கூட்டத்திற்கு மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமை ஏற்றார்.
கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த், ‛‛ரசிகர் மன்றமாக துவங்கி, மக்கள் இயக்கமாக பயணித்து வருகிறோம். வரும் காலங்களில் வேறு ஒரு பரிணாமத்தில் செயல்பட முன்னெடுப்புகளை செய்து வருகிறோம். அதற்காக பல கட்டமைப்புகளை செயல்படுத்தி வருகிறோம். மக்கள் இயக்கம் தமிழகத்தில் பலமான இயக்கமாக செயல்பட்டு வருகிறது.
சமூகவலைதளங்களில் மக்கள் இயக்க நிர்வாகிகள் தரம் தாழ்ந்து ஆபாசமாக பதிவிடக்கூடாது. கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும். எந்த வகையிலும் தனி நபர் தாக்குதல் இருக்க கூடாது. மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்திற்குள் சிக்காமல் நல்லிணக்க பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.
நீங்கள் அளிக்கும் பதில்கள் கருத்தியல் சார்ந்ததாக இருக்க வேண்டும். தலைமை வெளியிடும் பதிவுகளுக்கான லைக் மற்றும் ஷேர் மில்லியனை தாண்ட வேண்டும். தலைமையின் ஒப்புதல் இல்லாமல் மற்றவர்களின் பதிவுகளை லைக் மற்றும் ஷேர் செய்யக் கூடாது.
இவ்வாறு தெரிவித்தார்.
மதியம் விருந்து
கூட்டம் முடிந்த பின் நிர்வாகிகளுக்கு மதியம் பலவகையான காய்கறிகளுடன் கூடிய சைவ உணவு விருந்து அளிக்கப்பட்டது.