தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ்.ஜே. சூர்யா, சீமான், கிர்த்தி ஷெட்டி, கவுரி கிஷான் ஆகியோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'எல்.ஐ.கே' (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி). செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் 17ம் தேதி தீபாவளிக்கு திரைக்கு வருவதை முன்னிட்டு இன்று இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் பன்ச் (டீசர்) வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். இந்த டீசரின் மூலம் இப்படம் 2040 எதிர்காலத்தில் கதைக்களத்தில் நடைபெறுகிறது என புரிகிறது.அந்த காலகட்டத்திலும் தொழில்நுட்பம் வளர்ந்த நிலையிலும் கதாநாயகன், கதாநாயகியை பார்த்த உடனே காதல் என்கிற பழைய பார்முலாவில் கதை நகர்கிறது. அந்த காலகட்டத்தில் எல்.ஐ.கே என்கிற காதலர்களுக்கான ஆப் நிறுவனராக எஸ்.ஜே. சூர்யா வருகிறார். குறிப்பாக இந்த பர்ஸ்ட் பன்ச்சில் அனிருத் இசையமைத்த பழைய ஆல்பம் பாடலான 'எனக்கென யாரும் இல்லையே' பாடல் சர்ப்ரைஸ் ஆக இடம்பெற்றுள்ளது.