நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

நடிகை ஷாலின் சோயா மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக இருந்து படங்களில் நடித்து வருகிறார். தமிழில் 'ராஜா மந்திரி' படத்தில் நடித்திருந்தார். மேலும் ‛குக் வித் கோமாளி 5' என்கிற ரியாலிட்டி ஷோவின் மூலம் தமிழ் மக்களிடையே பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஷாலின் சோயா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவரின் ஆசை குறித்து பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது: " எனக்கு நல்ல நல்ல படங்களை இயக்க வேண்டும் என்பது தான் கனவு. இதை நான் கூறினால், என்னை நடிக்கிறாள் என்று சொல்கிறார்கள். என்னைப் பத்தி என்ன தெரியும் அவங்களுக்கு ? 10 வருடங்களாக படம் இயக்க முயற்சி செய்து வருகிறேன். இதுவரை 8க்கும் மேல் குறும்படங்களை இயக்கியுள்ளேன். நாம வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு அர்த்தம் வேணும். அது எனக்கு சினிமாதான். இறப்பதற்கு முன்பு ஒரு நல்ல இயக்குனர் என்கிற பெயரை நான் வாங்கணும். மக்களை என்டர்டெயின் பண்ணணும். அதுதான் என் லட்சியம். " என மனம் திறந்து பேசியுள்ளார் ஷாலின் சோயா.