சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு | ஆண்டனி வர்கீஸ் நடிக்கும் 'காட்டாளன்' பர்ஸ்ட்லுக்கு வெளியீடு | தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் |
சல்மான் கான் தொகுத்து வழங்கும் 'பிக் பாஸ்' ஹிந்தி சீசன்19 நிகழ்ச்சி நேற்று முதல் ஆரம்பமானது. மொத்தம் 16 போட்டியாளர்கள் நேற்று வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். அவர்களில் ஒருவரை ரசிகர்கள் தேர்ந்தெடுத்து அனுப்பியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்கான அரங்கம், மும்பை பிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த முறை, 'மர வேலைகளில் கேபின்' என்ற தீம் கடைபிடிக்கப்பட்டு அதன்படி மரத்திலான வேலைப்பாடுகளுடன் வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் ஜெயில் நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக 'ரகசிய அறை' அமைக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலிருந்து 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
பிக் பாஸ் ஹிந்தி நிகழ்ச்சியை 4வது சீசனிலிருந்து சல்மான் தொகுத்து வழங்கி வருகிறார். அவருக்காகவே இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் ரசிகர்கள் அதிகம்.
தமிழிலும் 'பிக் பாஸ் சீசன் 9' பற்றிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் போலவே விஜய் சேதுபதிதான் தொகுத்து வழங்க உள்ளார் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.