ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் |

69வது தேசிய திரைப்பட விருதுகள் சில தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. இதில் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் சிறப்பாக இசையமைத்தமைக்காக இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு புஷபா படக்குழுவினர், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் தனக்கு தேசிய விருது கிடைத்ததை அடுத்து சென்னையில் உள்ள இளையராஜா ஸ்டுடியோவிற்கு சென்ற தேவிஸ்ரீ பிரசாத், அங்கு இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார். இளையராஜாவும், தேவிஸ்ரீபிசாத்தை வாழ்த்தினார். இதுதொடர்பாக வீடியோவை வெளியிட்டுள்ள தேவிஸ்ரீ பிரசாத், ‛‛தேசிய விருது பெறுவதற்கு வழிவகுத்த அனைத்து ஊக்கங்களும் தந்த இசைஞானி இளையராஜாவுக்கு நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.