லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
மாரி செல்வராஜ் இயக்கத்தில், ஏஆர் ரகுமான் இசையமைப்பில், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் மற்றும் பலர் நடிக்கும் 'மாமன்னன்' படத்தின் டிரைலர் இரண்டு தினங்களுக்கு முன்பு யு டியூபில் வெளியானது. இப்படத்தின் டிரைலர் தற்போது 92 லட்சம் பார்வைகளைக் கடந்து ஒரு கோடி பார்வையை நோக்கி போய்க் கொண்டிருக்கிறது.
உதயநிதி கதாநாயகனாக நடித்து இதுவரை வெளிவந்த படங்களில் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்த 'சைக்கோ' டிரைலர் மட்டும் 62 லட்சம் பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அதற்கடுத்து அவர் நடித்து வெளிவந்த 'நெஞ்சுக்கு நீதி, கலகத் தலைவன், கண்ணை நம்பாதே' ஆகிய படங்களின் டிரைலர்கள் கூட 'சைக்கோ' டிரைலரின் பார்வைகளைக் கடக்கவில்லை. அதைவிடக் குறைவான பார்வைகளையே பெற்றதாக இருந்தது. ஆனால், இப்போது 'மாமன்னன்' டிரைலர் 'சைக்கோ' டிரைலரின் பார்வைகளைக் கடந்து போய்க் கொண்டிருக்கிறது.
ஏஆர் ரகுமான் இசை, உடன் நடிக்கும் நடிகர்களின் மாறுபட்ட கதாபாத்திரங்கள், மாரி செல்வராஜ் இயக்கம் மீதான எதிர்பார்ப்பு என வேறு சில அம்சங்களும் இப்பட டிரைலரின் பார்வைகளை அதிகம் பெறக் காரணமாக இருக்கிறது. இந்த மாதம் ஜுன் 29ம் தேதி வெளியாக உள்ள இப்படத்திற்கு டிரைலர் வெளியீட்டிற்குப் பிறகு எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. தனது முந்தைய படங்களான 'பரியேறும் பெருமாள், கர்ணன்' படங்களைப் போலவே இப்படத்திலும் சாதி அரசியலை மையப்படுத்தியிருப்பார் மாரி செல்வராஜ் என்று டிரைலரைப் பார்த்தவர்களின் கருத்தாக உள்ளது.