ரேபிஸ் நோய் பாதிக்கப்பட்டவராக நடித்த புது ஹீரோயின் | இசையமைப்பாளர் பரத்வராஜ்க்கு குறள் இசையோன் விருது : கனடா உலக திருக்குறள் மாநாட்டில் கவுரவம் | தீபாவளி போட்டியில் இன்னும் சில படங்கள் | பிளாஷ்பேக்: எஸ்.பி.முத்துராமனை ஏமாற்றிய 50வது படம் | சுபத்ரா ராபர்ட் கதை நாயகியாக நடிக்கும் 'மெல்லிசை' | ராம்லீலா நாடகத்திலிருந்து பூனம் பாண்டே நீக்கம் | விஜய்க்கு விதிக்கப்பட்ட அபராதத்தை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு | பிளாஷ்பேக்: சிவாஜி நாடகம் பார்க்க ஸ்பெஷல் ரயில் | கலைமாமணி விருது : ஜெயப்பிரியா விக்ரமன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: முதல் திரைப்படக் கல்லூரி மாணவன் தந்த முழுமையான கலைப்படைப்பு “அவள் அப்படித்தான்” |
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், சாய் பல்லவி மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம் 'மாரி 2'. யுவன் ஷங்கர் ராஜா இசையில் தனுஷ் எழுதி தீ-யுடன் இணைந்து பாடிய 'ரவுடி பேபி' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. தமிழ் சினிமாவில், யு டியூப் தளத்தில் முதன் முதலில் 1000 மில்லியன் பாடலைக் கடந்த பாடல் என்ற சாதனையைப் படைத்தது.
யு டியூப் தளத்தில் 2019 ஜனவரி மாதம் 2ம் தேதி வெளியான, அந்தப் பாடல் தற்போது 1700 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. இப்போதும் அந்தப் பாடல் லட்சக்கணக்கானப் பார்வைகளைத் தொடர்ந்து பெற்று வருகிறது. 2019ல் 738 மில்லியன், 2020ல் 308 மில்லியன், 2021ல் 253 மில்லியன், 22ல் 132 மில்லியன், 2023ல் 94 மில்லியன், 2024ல் 104 மில்லியன், 2025ல் இதுவரையில் 71 மில்லியன் பார்வைகளை இந்தப் பாடல் கடந்துள்ளது. இப்படியே பார்க்கப்பட்டால் இந்தப் பாடல் 2 பில்லியன் பார்வைகளை அடுத்த ஓரிரு வருடங்களில் பெற்றுவிடவும் வாய்ப்புள்ளது.
தமிழ் சினிமாவில், யு டியூப் பார்வைகளில் இந்தப் பாடலை மிஞ்ச வேறு எந்தப் பாடலும் அடுத்த சில வருடங்களிலாவது வருமா என்பது ஆச்சரியம்தான். இந்தப் பாடலை அடுத்து இரண்டாவது இடத்தில் 'அரபிக்குத்து' பாடல் 744 மில்லியன் பார்வைகளுடனும், 'டம் டம்' பாடல் 691 மில்லியன் பார்வைகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளது.