தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் |

ரிஷப் ஷெட்டி இயக்கம் நடிப்பில் உருவாகியுள்ள 'காந்தாரா சாப்டர் 1' படத்தின் டிரைலர், கன்னடம், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நேற்று முன்தினம் யு டியூப் தளத்தில் வெளியானது. டிரைலருக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் சேர்த்து, இரண்டு நாட்களுக்குள் 150 மில்லியன் பார்வைகளை இந்த டிரைலர் கடந்துள்ளது. கன்னடத்தை விடவும் ஹிந்தி டிரைலருக்கான வரவேற்பு அதிகமாக இருக்கிறது. யு டியூப் தளத்தைப் பொறுத்தவரையில் கன்னடத்தில் '18 மில்லியன் பார்வைகளையும், ஹிந்தியில் 30 மில்லியன், தெலுங்கில் 15 மில்லியன், தமிழில் 10 மில்லியன், மலையாளத்தில் 6 மில்லியன் பார்வைகளையும் கடந்துள்ளது.
மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான 'காந்தாரா' படத்தின் டிரைலர் கன்னடத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. ஹிந்தி டிரைலர் 22 மில்லியன், தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய டிரைலர்கள் 3 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தது. தற்போது 'காந்தாரா சாப்டர் 1' டிரைலர் அவற்றையைல்லாம் முறியடித்து அதிகப் பார்வைகளைப் பெற்று வருகிறது.