லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஏற்கனவே மூன்று முறை திருமணம் செய்து கொண்டு விவாகரத்து பெற்றுள்ள ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், தற்போது நான்காவது முறையாக திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார். கடந்த 1987ம் ஆண்டில் மிமி ராக்கர்ஸ் என்பவரை திருமணம் செய்த டாம் குரூஸ், அவரை 1990ம் ஆண்டில் விவாகரத்து செய்தார். பிறகு 1990ம் ஆண்டில் நிக்கோல் கிட்மேன் என்பவரை திருமணம் செய்தவர் 2001ம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார். அதையடுத்து 2006ம் ஆண்டில் கேட்டி ஹோம்ஸ் என்பவரை திருமணம் செய்தவர், 2012ம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்தார்.
இந்த நிலையில் தற்போது ஹாலிவுட் நடிகை அனா டி அர்மஸ் என்பவரை காதலித்து வரும் டாம் குரூஸ், தங்களது திருமணத்தை விண்வெளியில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளார். அவர் திட்டமிடுவது போல் அவரது இந்த நான்காவது திருமணம் விண்வெளியில் நடைபெற்றால், விண்வெளியில் முதன்முதலாக திருமணம் செய்து கொண்ட தம்பதி என்ற பெருமையை டாம் குரூஸ், அனா டி அர்மஸ் பெறுவார்கள். இருவருக்கும் இடையே 25 வயது வித்தியாசம் என்பது குறிப்பிடத்தக்கது.