லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய குட் பேட் அக்லி படத்தில் நடித்த பிறகு கார் ரேஸ் போட்டிகளில் பல மாதங்களாக பங்கேற்று வருகிறார் அஜித்குமார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் இரண்டாவது இடத்தை பிடித்த அஜித் அணி, இத்தாலி, ஸ்பெயினில் நடைபெற்ற கார் ரேஸ் போட்டிகளில் மூன்றாவது இடம் பிடித்துள்ளது. இந்த நிலையில் விரைவில் அஜித்குமார் சென்னை திரும்புவார் என்கிற தகவல்கள் வெளியாகி உள்ளன. குட் பேட் அக்லி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் அஜித் 64வது படத்தை இயக்குவதற்கும் தயாராகிக் கொண்டிருக்கிறார். முந்தைய படத்தில் இருந்து இந்த படத்தில் மாறுபட்ட ஸ்லிம்மான கெட்டப்பில் அஜித் குமார் நடிக்கப் போவதாக கூறும் ஆதிக், அஜித் 64 வது படம் குறித்து அறிவிப்பு இந்த மாதம் இறுதியில் வெளியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியானதும் படப்பிடிப்பை தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளார்கள்.