கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' | 'வாரணாசி' பட விழா செலவு 27 கோடி, ஸ்ருதிஹாசனுக்கு ஒரு கோடி | பிளாஷ்பேக்: ஒரிஜினலை வெல்ல முடியாத ரீமேக் |

லவ் டுடே, டிராகன் படங்களின் ஹிட்டுக்கு பிறகு டியூட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி போன்ற படங்களில் நடித்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதில் டியூட் படம் தீபாவளியையொட்டி அக்டோபர் 17ம் தேதி திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கீர்த்தீஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சரத்குமார், ரோகிணி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாய் அபயங்கர் இசை அமைத்துள்ளார். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே ஊரும் பிளட், நல்லாரு போ ஆகிய பாடல்கள் வெளியான நிலையில் இப்போது ‛சிங்காரி' என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை பிரதீப் ரங்கநாதன் பாடி உள்ளார். அவருடன் இசையமைப்பாளர் சாய் அபயங்கரும் இணைந்து பாடி உள்ளார். நடிப்பு, இயக்கம் தாண்டி இந்தப்பாடல் மூலம் பாடகராகவும் களமிறங்கி உள்ளார் பிரதீப்.




